செய்திகள் :

``எம்.எல்.ஏ-க்களுக்கு சலுகை... தூய்மைப் பணியாளருக்கு ஏமாற்றமா?" - உழைப்போர் உரிமை இயக்கம் கேள்வி

post image

நகராட்சி நிர்வாகத் துறையைத் தன் வசம் வைத்துள்ள தமிழக முதலமைச்சர் உடனடியாக தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் கு.பாரதி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``10 முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வெறும் ரூ19,000 ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.

உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி
உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கவும், அவர்களின் உதவியாளருக்கு சம்பளம் வழங்கவும் நிதி ஒதுக்கும் அரசு, தூய்மைப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம்கூட வழங்க முடியாதா? எனவே, ஆட்சியர் நிர்ணயித்த தினக்கூலியான ரூ.832 வழங்க வேண்டும் அல்லது குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25,000 வழங்க வேண்டும்.

ஆபத்தான சூழலில் பணிபுரியும் ஏழைத் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கையைப் புறக்கணிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாது. ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் தொழிலாளர்களின் சம்பளத்தில் பெரும் முறைகேடு நடக்கிறது.
தூய்மைப் பணியாளர்களைக் கொத்தடிமைகளாக, மனிதநேயமற்ற முறையில் நடத்தக் கூடாது.

அரசு ஊழியர்களுக்கு 3-வது பிரசவம் என்றாலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்குவதைப் போல, பெண் தூய்மைப் பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். 365 நாட்களும் விடுப்பின்றி உழைக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுமுறையும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தரமற்ற உணவுக்குப் பதிலாக உணவுப்படி வழங்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களின் அத்தியாவசியத் தேவைகளான கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகளைச் செப்டம்பர் 15-க்குள் செய்து தருவதாக மாநகராட்சி ஆணையர் உறுதியளித்திருக்கிறார்.

கு.பாரதி
கு.பாரதி

அதேநேரம், தேர்தல் வாக்குறுதிப்படி பணிநிரந்தரம் செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. போராட்டக் களத்தில் சீருடை அணியாத ஆண் காவல்துறையினரைக் கொண்டு பெண் தொழிலாளர்களை மிரட்டுவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும். முதலமைச்சரைச் சந்தித்துத் மனு அளிக்கும் வரை தங்களின் நியாயமான அறப்போராட்டம் தொடரும்" என்றார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க