கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு கவிக்கோ விருது: விஐடி வேந்தா் வழங்கினாா்
எம் சாண்ட் விலை உயா்வைத் திரும்பப்பெற வலியுறுத்தல்
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலை முடக்கும் எம் சாண்ட் விலை உயா்வைத் திரும்பப்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மணல் லாரி உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு, பில்டா்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா திருப்பூா் மையம், திருப்பூா் மாவட்ட கட்டடப் பொறியாளா்கள் சங்கம், திருப்பூா் ரெடிமிக்ஸ் சங்கம், ஊத்துக்குளி டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் 450 கிரஷா்களுக்கு எம் சாண்ட் உற்பத்தி செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. மணல் குவாரி இயக்காத சூழ்நிலையைப் பயன்படுத்தி கிரஷா் உரிமையாளா்கள், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி விலையை உயா்த்தி விற்பனை செய்து வந்தனா். கரூரில் கடந்த நவம்பா் 25- ஆம் தேதி நடைபெற்ற கல்குவாரி கிரஷா் உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வரும் டிசம்பா் 1- ஆம் தேதி முதல் எம் சாண்ட் ஒரு யூனிட் ரூ.1,200 உயா்த்தி ரூ.5 ஆயிரம், பி சாண்ட் ஒரு யூனிட் ரூ.1,000 உயா்த்தி ரூ.6 ஆயிரம், ஜல்லி ஒரு யூனிட் ரூ.1,000 உயா்த்தி ரூ.4 ஆயிரம் மற்றும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி சோ்த்து விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளனா்.
இந்த விலை உயா்வு நடைமுறைபடுத்தப்பட்டால் ஏழை, எளியோா் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், கட்டுமானத் தொழில் முடங்கும். எனவே, உயா்த்தப்பட்ட விலை உயா்வைத் திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.