வேலூர் ஈசன்மலை: ஈ வடிவில் சித்தர்; ஜம்புகேஸ்வரர்; வாரயிறுதி ஆன்மிகப் பயணம் செய்ய...
'அமைதிப்படை அமாவாசை தான் ஓபிஎஸ், தன்னைத் தவிர யாரும் வளரக்கூடாது என.!' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
மதுரையில் உள்ள செய்தியாளர்கள் மன்றத்தில் எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, " தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலையில் திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது மூலம் அவர் திமுகவிற்கு விசுவாசமாக இருந்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
பன்னீர் செல்வம் ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தார் குறிப்பாக அம்மா சேவல் சின்னத்தில் நின்றார். அவருக்கு எதிராக போடி தொகுதியில் இரட்டைப் புறாவிற்கு வேலை செய்தார் .
அதிமுக ஒன்றான பின்பு அதிமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார். இவையெல்லாம் அதிமுக தொண்டர்களின் உழைப்பால் கிடைத்தவை . அம்மாவின் மறைவுக்குப் பின்பு ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார், அவரை மன்னித்து எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் பதவி வழங்கினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேலை செய்யவில்லை. 2021 தேர்தலில் கூட ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி இருப்பார். திமுகவின் கைக்கூலியாக எட்டப்பர் வம்சம் போல காட்டி கொடுத்து கொண்டு தான் இருந்தார். தனக்கு அதிகாரம் ,பதவி வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போவார். தனக்கு பதவி இல்லை என்றால் அழிந்து போக வேண்டும் என்று நினைப்பார். திமுக பொய் வழக்கு போடப்பட்டு அம்மா தண்டனை பெற்ற இடைக்காலங்களில் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். இதில் திமுகவிற்கு தொடர்புக்கு இருக்கிறதா? திமுகவில் உளவாளியாக இருக்கிறாரா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டது.
தற்போது அவர் எடுத்த முடிவு தனிப்பட்ட முடிவு. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வராது, தென் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி யாரையும் வளர விட மாட்டார் என்ற பச்சைப் பொய் கூறுகிறார். சட்டமன்ற துணைத் தலைவராக அவரை நீக்கிய பின்பு தென் மாவட்டத்தை சேர்ந்த எனக்குத்தான் அந்த வாய்ப்பு எடப்பாடி பழனிசாமி வழங்கினார் .
அம்மா இருக்கும் காலத்திலே அமைதிப்படை அமாவாசையாக ஓபிஎஸ் இருந்தார், தன்னைத் தவிர யாரும் வளரக்கூடாது என்று நினைத்தார். அப்படி வளரும் நபர்களை அழிக்க பார்ப்பார்.
காளிமுத்து ,சத்தியமூர்த்தி, சேடப்பட்டி முத்தையா, கருப்பசாமி பாண்டியன் இப்படி பல பேர் அம்மாவின் குட் புக்கில் இருந்தனர். இதனால் அவருக்கு தூக்கம் வரவில்லை இவர்கள் கதையை எப்படி முடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தென் மாவட்டங்களில் இவரைத் தவிர யாரையும் வளரவிடவில்லை .
எடப்பாடி பழனிசாமி மன உறுதியுடன் இந்த கருங்காலியை நாம் சேர்க்கக்கூடாது என இருந்தார். அப்போது சிலர் வருத்தம் தெரிவித்தனர். ஆனால் இன்றைக்கு எல்லோரும் இவரை ஆரம்பத்தில் நீக்கியது சரிதான் என்று கூறி வருகிறார்கள்.
அறிவாலயத்தில் அடைக்கலம் ஆவது செத்த பிணத்திற்கு சமம். உங்கள் பூர்வீகம் என்ன? உங்களுக்கு இந்த வசதி எப்படி வந்தது என அனைவருக்கும் தெரியும். புரட்சித் தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா வாழ்நாள் முழுவதும் உயிரைக் கொடுத்து இந்த இயக்கத்தை காப்பாற்றினார்கள்.
அம்மா மீது பொய் வழக்கு போட்டு அவர் உயிரை போக செய்யும் வகையில் பல்வேறு இன்னல்களை செய்த திமுகவிற்கு உளவாளியாக தான் ஓபிஎஸ் இருந்து உள்ளார். ஏனென்றால் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்.
அதிமுகவிற்கு கெட்ட நேரம் விலகிவிட்டது இனி நல்ல நேரம் வந்துவிட்டது. பதவிக்காக தான் தர்மயுத்தம் ஆரம்பித்தார் தற்போது அறிவாலயத்தில் சேர்ந்து தர்மயுத்தம் 3,0 ஆரம்பித்துவிட்டார் இன்றைக்கு நாக்கில் நரம்பு இல்லாத வகையில் ஓபிஎஸ் பேசுகிறார்
அதிமுக நிர்வாகிகளை திமுக சேர்த்து வருகிறது இதனால் அண்ணா அறிவாலயம், தற்போது அனைத்திந்திய அண்ண திமுக அறிவாலயமாக மாறிவிட்டது. ஸ்டாலின் திமுக தொண்டர்கள் நம்பி இல்லை, அம்மா படை நம்பித்தான் உள்ளார்.
திமுகவில் இனி எந்த பதவி பெற்றாலும் அது துரோகத்திற்கு கிடைத்த பரிசாகத்தான் ஓபிஎஸ்க்கு இருக்கும். அது விசுவாச பரிசாக இருக்காது. பொது வாழ்க்கையில் எப்படி இருக்கக் கூடாது என்ற தவறாக முன் உதராணத்தை முன் எடுத்துள்ளார். அன்றைக்கு அம்மா பக்தனாக இருந்த ஓபிஎஸ், இன்றைக்கு அறிவாலயத்தின் பக்தனாக மாறிவிட்டார்.

பொதுவாக எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட எந்த முடிவு எடுக்க மாட்டார். மூத்த தலைமைகளை நிர்வாகிகள், மாவட்ட கழகச் செயலாளர்கள் ,கலந்து பேசி பொதுகுழுவில் தான் முடிவு எடுப்பார், பொதுக்குழு முடிவின் படிதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பதவிக்காக எந்த எல்லைக்கும் பன்னீர்செல்வம் செல்வார்.
அதிமுகவில் எந்த கிளைச் செயலாளரும் செல்லவில்லை, இறந்து போனாலும் தன் மீது அதிமுக கொடியை வைக்க வேண்டும் என்று தான் விரும்புவார். போர்க்களத்தில் எதிரிடம் சரணடைய கூடாது அப்படி நிலை ஏற்பட்டால் சாவதே மேல் என்று வீரர்கள் நினைப்பார் அதுபோலத்தான் அதிமுக தொண்டர்கள்” என்றார்.














