செய்திகள் :

இனி 'இந்த' ஏஐ வேண்டாம் - ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு; காரணம் என்ன?

post image

ஏ.ஐ இப்போது உலக அரசாங்கங்களின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது. இதில் அமெரிக்கா மட்டும் விதிவிலக்கல்ல.

அமெரிக்காவின் அரசாங்க துறைகளில் பெரும்பாலும் ஆந்த்ரோபிக் ஏ.ஐ (Anthropic) பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்புத் துறையில் ஏ.ஐ பயன்படுத்துவதன் சம்பந்தமாகத் தான் தற்போது அமெரிக்க அரசாங்கத்திற்கும், ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கும் பிரச்னை எழுந்துள்ளது.

ஆந்த்ரோபிக் ஏஐ | Anthropic AI
ஆந்த்ரோபிக் ஏஐ | Anthropic AI

காரணம்...

ராணுவத்தின் அனைத்து செயல்பாட்டிற்கும் ஆந்த்ரோபிக் ஏ.ஐ பயன்பாட்டைக் கேட்டுள்ளது அமெரிக்க அரசு.

ஆனால், அமெரிக்க குடிமக்களை கண்காணிப்பதற்கும், மனித உதவியில்லாமல் டார்க்கெட்டை நிர்ணயித்து கொல்லும் 'கில்லர் ரோபோட்டுகளில்' ஏஐ பயன்படுத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

'மிகப்பெரிய ராணுவ வேலைகளில் ஏஐயை ஈடுபடுத்தும் அளவிற்கு, அது இன்னும் நம்பகமாக உருமாறவில்லை' என்று ஆந்த்ரோபிக் நிறுவனம் காரணம் கூறுகிறது.

ட்ரம்ப் உத்தரவு

ஆனால், இது அமெரிக்க நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை.

இதையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "அனைத்து ஃபெடரல் நிறுவனங்களும் விரைவில் ஆந்த்ரோபிக் ஏஐ பயன்படுத்துவதில் இருந்து வெளியேற வேண்டும்" என்று ஆறு மாதக் கெடு கொடுத்திருக்கிறார்.

'அவர் இதை கடந்துதான் போக வேண்டும், அரசியலில் இது.!' - விஜய் - சங்கீதா விவகாரம் குறித்து அண்ணாமலை

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கும் சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. விஜய் - சங்கீதா இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்... மேலும் பார்க்க

'அண்ணா, பெரியார்..? - ஸ்டாலின், உதயநிதி பேனர்களால் நிரம்பிய கோவை மாநாடு!

'என் வாக்குச் சாவடி.. வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான மேற்கு மண்டல மாநாடு கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையி... மேலும் பார்க்க

'அமைதிப்படை அமாவாசை தான் ஓபிஎஸ், தன்னைத் தவிர யாரும் வளரக்கூடாது என.!' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரையில் உள்ள செய்தியாளர்கள் மன்றத்தில் எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, " தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலையில் திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது மூலம் அவர் தி... மேலும் பார்க்க

"ரஜினி, ஆக்‌ஷன் சினிமா பிடிக்கும்; கட்சியை கண்டு பயம்" - மோகன்லால் நேர்காணலில் பினராயி விஜயன்

கண்டும் மிண்டியும் என்ற தலைப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகர் மோகன்லால் நேர்காணல் நடத்தினார். நேர்காணலுக்கான டீசர் 'மக்கள் மனதில் நிறைந்த, மக்களை மனதில் நிறைத்த இருவர்' என்ற வாசகத்துடன் ஏற்... மேலும் பார்க்க

'செந்தில் பாலாஜி அனுபவித்த தொல்லைகளைப் போல வேறு யாரும் அனுபவித்ததில்லை!' - கோவையில் ஸ்டாலின்

'என் வாக்குச் சாவடி.. வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான மேற்கு மண்டல மாநாடு கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் நடைபெற்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெ... மேலும் பார்க்க