செய்திகள் :

எம்.ஜி.ஆருக்கு ’புரட்சித் தலைவர்’ பட்டம் சூட்டிய கே.ஏ கிருஷ்ணசாமி மகன் அதிமுக-வில் இருந்து விலகல்!

post image

தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து அதிமுக-வில் முக்கியப் பதவிகளில் இருந்த சிலர் அங்கிருந்து விலகி தவெகவில் சேர்ந்து வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.

எம்.எல்.ஏ க்களாக இருந்த விஜயபாஸ்கர்கள் தொடங்கி கட்சியில் பொறுப்பு வகித்த பலரும் வரிசையாக பனையூர் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் எம்.ஜி.ஆர், அதிமுகவைத் தொடங்கிய போது அவருக்குப் பக்கபலமாகவும் கட்சியின் முதல் அமைப்புச் செயலாளராகவும் கட்சியின் ஆரம்ப கால அதிகாரபூர்வ நாளேடான `தென்னகத்தின்' ஆசிரியராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ கிருஷ்ணசாமியின் மகனும் ஜெயலலிதா காலத்தில் அம்மா பேரவையில் பொறுப்பு வகித்தவருமான கே்.ஏ.கே முகில் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு 'புரட்சித் தலைவர்' என்ற பட்டத்தை கே.ஏ. கிருஷ்ணசாமி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. .

இது குறித்து அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில்.

‘அம்மா திடீரென ஒருநாள் என்னை அழைத்து ’உன்னை எம்.ஜி,ஆர் இளைஞரணி செயலாளராக நியமிக்கிறேன். உன் தந்தை கட்சியிலும் மக்களிடத்திலும் நன்மதிப்பை பெற்றவர், அவர் பெயரைக் காப்பாற்றும் விதத்தில்  சிறப்பாக செயல்பட்டு மக்கள் பணி ஆற்ற வேண்டுமென அந்த உத்தரவைத் தந்தார்.

அவரது மறைவுக்குப் பின் தங்களது தலைமயின் கீழ் அரசியல் பொறுப்புகளைத் தொடர்ந்தேன். தற்போது கட்சியிலிருந்து விலகும் பொறுப்பை என் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எடுக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன் முதல்வர் விஜய்யை சந்தித்து வந்த முகிலும் லயோலாவில் விஜய் படித்த போது உடன் படித்தவராம்.!

தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது! - அருகருகே அமர்ந்திருக்கும் விஜய், டி.கே சிவகுமார்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது 'தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு' சென்னை, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், தென் ம... மேலும் பார்க்க

அதிரடிக்கு தயாராகும் ஸ்டாலின் - தனிக்கவனம் பெற்ற வன்னிஅரசு - நெருக்கடியில் நயினார்! | கழுகார்

அட்டூழியம் செய்யும் காவல் அதிகாரி!"வி.ஐ.பி-க்குத்தான் வேலை செய்வேன்..."தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் 'முருகக் கடவுள்' அதிகாரி, பொதுமக்களை சந்தித்து புகார்களை வாங்குவதில்லையாம். அதோடு, தனக்... மேலும் பார்க்க

`பென்ஸ், எட்டியோஸ், டிகார்... சொந்தமாக கார் இருந்தும்!' - எம்எல்ஏ-க்கள் குறித்து வெளியான தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ``நான் 250 கி.மீ தூரத்திலிருந்து வருகிறேன். கார் வசதி இல்லை. வாடகை வாகனத்தையே நம்பவே... மேலும் பார்க்க

`அடுத்த பிரதமர் விஜய்?' - திமுக எம்பி கனிமொழி சொன்ன பதில் என்ன?

இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தவெகவினர் கூறிவரும் நிலையில், 'இதற்கு காங்கிரஸ் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும்' என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கூறியிருக்கிறா... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் கர்நாடக முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்.!" - வைகோ நம்பிக்கை!

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை அம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளின் செலவுக்கு மாதம் ரூ.2000; மேற்படிப்பை ஊக்கப்படுத்த மகாராஷ்டிரா அரசு புது திட்டம்

மகாராஷ்டிரா அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் படிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது. மாணவிகள் படித்துக்கொண்டே சம்பாதிக்கும் திட்டத்தில் இத்திட்டம் அறிமுகம்... மேலும் பார்க்க