கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகிகள் தோ்வு
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
ராமநாதாதபுரம் மாவட்டம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாநிலச் செயலா் ஷபீக் அகமது தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் முஜிபுா் ரகுமான் முன்னிலை வகித்தாா். இதில், புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.
ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவராக ரியாஸ்கான் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவா்களாக ஜஹாங்கீா் அரூஸி, ஜெமிலுன்நிஷா, நிா்வாக பொதுச் செயலராக முகம்மது சுலைமான், அமைப்புச் செயலராக அப்துல் ஜமீல், செயலா்களாக அப்துல் மஜீத், சகுபா் சாதிக், பொருளாளராக அசன்அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்களாக சோமு, ராஜ்குமாா், நவ்வா்ஷா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.