ஐஸ்வர்யா ராயை அடித்தார்..! லாரன்ஸ் பிஷ்னோயைவிட சல்மான் கான் மோசமானவர்! முன்னாள் காதலி பேட்டி!
நடிகையும் சமூக ஆர்வலருமான சோமி அலி சல்மான் கான் லாரன்ஸ் பிஷ்னோயைவிட மோசமானவர் என விமர்சித்துள்ளார்.
பாலிவுட்டில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சோமி அலி. சல்மான் கானுடன் 8 வருடம் காதலில் இருந்தார். சல்மான் கான் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்த பிறகு சோமி அலி சல்மானைவிட்டு விலகினார். பின்னர் 1999ல் இந்தியாவை விட்டும் வெளியேறினார்.
நோ மோர் டியர்ஸ் என்ற என்ஜிஓ அமைப்பினை நிறுவி ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கும் உதவி வருகிறார்.
ஐஏஎன்எஸ்-க்கு அளித்த பேட்டியில் சோமி அலி கூறியதாவது:
சல்மான் கான் என்னை துன்புறுத்தியதுபோல யாரையும் துன்புறுத்தவில்லை. சங்கீதா, காத்ரீனா நான் சல்மான் கானால் அனுபவித்த பாதியைக் கூட அனுபவித்திருக்கமாட்டார்கள்.
ஐஸ்வர்யா ராயை அடித்த சல்மான் கான்
ஐஸ்வர்யா ராயை மிகவும் துன்புறுத்தினார். ஐஸ்வர்யாவின் தோள்பட்டையை மிகுந்த காயத்துக்குள்ளாக்கினார் சல்மான் கான். ஆனால், காத்ரீனாவை என்ன செய்தார் என எனக்குத் தெரியவில்லை.
சல்மான் கான் எனக்கு செய்ததை ஒப்பிடும்போது லாரன்ஸ் பிஷ்னோய் எவ்வளவோ மேலானவர் என நினைக்கிறேன்.
தபுவின் கண்ணீர்
ஒருமுறை சல்மான் கான் என்னை மிகவும் கொடூரமாக தாக்கினார். அப்போது எனது வீட்டு பணியாளர் அடிக்க வேண்டாமென கதவினை தட்டினார். அந்தளவுக்கு தாக்கினார்.
தீவிரமான முதுகு வலியால் நெடுநாள் படுத்த படுக்கையானேன். அப்போது என்னைப் பார்க்க வந்த நடிகை தபு அழுதே விட்டார். ஆனால். சல்மான் கான் அப்போதும் பார்க்க வரவில்லை.
நான் அனுபவித்த கடுமையான துயரம் எனது அம்மா, நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். இதைப் பற்றி விரிவாக ஒரு புத்தகம் எழுதியுள்ளேன்.
லாரன்ஸ் பிஸ்னோய் - சல்மான் கான் மோதல்
1998 ராஜஸ்தானில் ஹம் சாத் சாத் ஹைன் படத்தின் படப்பிடிப்பின்போது பிஷ்னோய் சமூக மக்களின் புனிதமாக கருதப்படும் பிளாக் பக் எனும் மானை சல்மான் கான் வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் பலமுறை சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சிறையில் இருந்தும் கொலை முயற்சியில் அவரது ஆள்களை ஏவியிருப்பது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சமீபத்தில் பாபா சித்திக் என்ற என்சிபி தலைவரை சல்மான் கான் நண்பர் என்பதாலே சுட்டுக் கொன்ற நிகழ்வு மும்பையை உலுக்கியது.