செய்திகள் :

‘ஒன்றிய அரசை எதிர்க்க தைரியம் இருக்கிறதா?’ - விஜய் அரசுக்கு அப்பாவு கேள்வி!

post image

தவெக அரசு மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்க்கவில்லை என்றும், கேள்வி கேட்கவில்லை என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு.

அந்தப் பதிவு...

2021-2026-ல் திமுக ஆட்சியில்

இருந்தபோது ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நிதியைக் குறைப்பதற்கும் பெயரை மாற்றுவதற்கும் எதிரான தீர்மானங்கள் மற்றும் மசோதாக்கள் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, ஒன்றிய பாஜக அரசை நேரடியாக எதிர்த்து மக்கள் பக்கம் நின்று வெற்றியைத் தந்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் ஒன்றிய பாஜக அரசு கனிமம் எடுக்க முயற்சித்தபோது, “நான் முதல்வர் பதவியை இழந்தாலும்” அரிட்டாபட்டியில் கனிமங்கள் எடுக்க ஒன்றிய பாஜக அரசை அனுமதிக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, தமிழக மக்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின்.

தற்போது மாநிலப் பட்டியலில் உள்ள சிறு கனிமங்கள் துறை நாடாளுமன்ற மசோதா மூலம் ஒன்றிய பாஜக அரசு கட்டுப்பாட்டிற்குக் கொண்டுசென்றதைக் கண்டித்துத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமோ, மசோதாவோ கொண்டுவருவதற்குத் தைரியம் இருக்கிறதா சி.எம் சார்?

ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையைத் தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால்,

ரூபாய் 5000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரத் துணிவிருக்கிறதா சி.எம் சார்?

பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் துணை வேந்தர்கள் நியமனம் மாநில அரசின் உரிமை என்று சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்து ஆளுநர் ஒப்புதல் பெற ஆண்மை இருக்கிறதா சி.எம் சார்?

திமுக ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குச் சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்து ஆளுநர் ஒப்புதல் பெற்றுச் சட்டப்படி தடை செய்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்று ஆன்லைன் லாட்டரி விற்பனைத் தடைச் சட்டம் கொண்டுவர இயலாத சுயநலவாதியாக இருக்கிறீர்களா சி.எம் சார்?"

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க