செய்திகள் :

`மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை' - நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன?

post image

மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட சுமார் 256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடைச் சட்ட (PMLA) வழக்கில் 3-வது குற்றவாளியாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன்  தயாநிதி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நரம்பியல் குறைபாடு மற்றும் பக்கவாதம் காரணமாகத் தான் விசாரணையை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தயாநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், 3-வது குற்றவாளிக்கான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு  விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், தயாநிதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. 

மேலும், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் வாக்களித்து, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

மு.க.அழகிரி

இதிலிருந்து அவர் நலமுடன் இருப்பது தெரியவருவதால், புதுச்சேரி ஜிப்மர் அல்லது எய்ம்ஸ் மருத்துவக் குழு மூலம் அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

தயாநிதி தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது," நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மனநலக் குறைபாடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது, சமூக வலைதளப் படங்களை வைத்து மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது" என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை கூடுதல் மாவட்ட மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி  S. சண்முகவேல் பிறப்பித்த உத்தரவில், 'கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதும், தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியப்படும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும்?' எனக் கேள்வியெழுப்பினார்.

மேலும் தயாநிதியின் தற்போதைய மனநிலை, புரிந்துகொள்ளும் திறன் மற்றும் உடல் தகுதியை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர், முதன்மை மனநல மருத்துவர் (Chief Psychiatrist), கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் மற்றும் முதன்மை நரம்பியல் வல்லுநர் (Chief Neurologist) அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து தயாநிதிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிபிஐ - நீதிமன்றம்

தேவைப்பட்டால் தயாநிதியை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து ஆய்வு செய்யும் அதிகாரமும் ஜிப்மர் இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

மேலும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், அதன் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத்துறையின் இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு தயாநிதி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நேபாள வெள்ளம்: உடல்களை அடக்கம் செய்கிறார்கள்; ஆனால் DNA-வை ஏன் சேமிக்கிறார்கள்?

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மீட்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதுவரை கிட்டத்தட்ட 675 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 3,000-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை... மேலும் பார்க்க

"அமைச்சர் ரமேஷின் விசுவாசத்துக்கான ஆட்டம் எல்லை தாண்டிய பயங்கரவாதம்!"- தோழர் கே.சுப்பராயன் காட்டம்

த.வெ.க அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துவருகின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு குஜிலியம்பாறை தாசில்தார் உத்தரவிட்டிருந்ததும், தமிழக உயர் கல்வ... மேலும் பார்க்க

'முதலமைச்சரின் ஆட்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்'- காங்கிரஸ் அரசை விமர்சித்த பினராயி

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பையன்னூரில் சி.பி.எம் சார்பில் தற்போதையை அரசியல் நிலையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கலந்துகொண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கார் கொடுத்தீங்க, டிரைவர்?'- `ஹெல்மெட்’ அணியாமல் வந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு அபராதம்

புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முத்தியால்பேட்டை தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனுக்கு கார் வழங்கப்பட்டிருக்கும் நிலையி... மேலும் பார்க்க

நேபாள வெள்ளம்: 'இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை' - இந்தியாவின் அடுத்தக்கட்ட உதவி என்ன?

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26), உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் பனிப்பாறை விழுந்து சரிந்ததால் தான் ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட... மேலும் பார்க்க

‘இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் அவர் இந்து அல்ல’ - மோகன் பகவத்

‘ஒரே உலகம், ஒரே மனிதகுலம்’ என்கிற நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 29) நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இந்து - முஸ்லிம் குறித்து... மேலும் பார்க்க