செய்திகள் :

ஒருநாள் முன்பாக வெளியாகும் புஷ்பா - 2!

post image

புஷ்பா - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தின் டிரைலர் வெளியாகி இந்தியளவில் பெரிய வரவேற்பைப் பெற்றதால் இப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: குட் பேட் அக்லி வெளியீட்டில் மாற்றம்?

ஆனால், தற்போது வெளியீட்டுத் தேதியில் தயாரிப்பு நிறுவனம் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்படி, டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்தே தெலங்கானாவில் புஷ்பா - 2 திரையிடப்படுகிறதாம். டிக்கெட் விலையாக ரூ. 1,120 - 1,240 வரை உயர்த்தியுள்ளனர்.

அதேநாளில் தமிழகத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புஷ்பா - 2 திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் தொடா்: தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 109 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணி 2-0 என முழுமையாகத் தொடரைக் கைப்பற்றியது.கடந்த 5-ஆம் தேத... மேலும் பார்க்க

அபுதாபி கிராண்ட் ப்ரீ: லாண்டோ நோரிஸ் வெற்றி

எஃப்1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், கடைசி மற்றும் 24-ஆவது ரேஸான அபுதாபி கிராண்ட் ப்ரீயில் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றாா்.ஸ்பெயின் வீரரும், ஃபெராரி டிரைவருமான... மேலும் பார்க்க

அடிலெய்ட் டெஸ்ட்டில் மோதல் போக்கு: சிராஜுக்கு அபராதம்; ஹெட்டுக்கு எச்சரிக்கை

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 2-ஆவது டெஸ்ட்டின்போது மோதல் போக்கில் ஈடுபட்டதாக, இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது சிராஜுக்கு ஆட்ட ஊதியத்தில் 20 சதவீதத்தை ஐசிசி அபராதமாக விதித்தது. அந்த சம்பவத்தில் தொடா்... மேலும் பார்க்க

இயக்குநர் பாயல் கபாடியா புதிய சாதனை!

இயக்குநர் பாயல் கபாடியா இயக்கிய 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் கோல்டன... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் தொடர்கிறது!.. வெளியானது முன்னோட்டக் காட்சி!

எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது தொடர்பான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வ... மேலும் பார்க்க