செய்திகள் :

`ஒரு நாவலாசிரியைக்கும் ஹீரோவுக்குமான நட்பு டு காதல்!' - `நேர்காணல்' குறும்படம் குறித்து இயக்குநர்

post image

குறும்படங்கள் (Short Films) திரைப்படம் மற்றும் கலைத் துறையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. புதுமுகங்களின் திறமையை வெளிப்படுத்தவும், புதிய இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரிய திரைத்துறைக்குள் நுழைவதற்கும், தங்களின் திறமையை நிரூபிக்கும் சிறந்த நுழைவுச்சீட்டாகக் குறும்படங்கள் அமைகின்றன.

சமீபத்தில் சென்னையில் உள்ள ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் 'நேர்காணல்' என்ற குறும்படம் திரையிடப்பட்டது. அதன் இயக்குநரான ஜி.கேவிடம் பேசினோம்.

குறும்படத்தில்..

`` என்னோட முழுப்பெயர் கோகுல் கிருஷ்ணா. இது என்னோட முதல் ஷார்ட் ஃபிலிம். நான் பயோமெடிக்கல் சயின்ஸ் படிச்சிருக்கேன். சினிமாவுல இயக்குநர் ஆகிடணும்னு ரொம்பவே ஆர்வம் உண்டு. சினிமாவுல நுழையணும்னா, இப்போ குறும்படம் வழியா என்ட்ரி ஆகுறது சிறந்த வழியா இருக்கு. அதனால ஒரு குறும்படம் செய்துட்டு, சினிமாவுல அடியெடுத்து வைக்கலாம்னு விரும்புறேன்.

இந்த குறும்படத்தை நண்பர்களோட தான் உருவாக்கியிருக்கேன். இது ஒரு மியூசிக்கல், ஃபீல்குட் ரொமாண்டிக் டிராமா. வித்தியாசமான ஒரு பின்னணியில் 2026ல நடக்கற கதையா இருக்கும். பொதுவா குறும்படங்கள்ல காதல்னாலே வழக்கமான ஒரு டெம்ப்ளேட்டுக்குள் அடக்கிடுவாங்க. ஆனா, எங்களோட 'நேர்காணல்' கதை அப்படியில்ல. வித்தியாசமான ஒரு காதல் கதையாக கொண்டு வந்துருக்கோம்.

படப்பிடிப்பில்..

ஹீரோ, ஹீரோயின் இடையே நெருக்கமான காட்சிகளோ, ஏன், 'ஐ லவ் யூ'ங்கற வார்த்தையோகூட இல்லாம இந்த குறும்படத்தை இயக்கியிருக்கேன். ஹீரோயின் ஒரு நாவலாசிரியை. மேடைனாலே அவங்களுக்கு ஒரு பயமும் தயக்கமும் இருக்கும். அவங்களுடைய மேடை பயத்தை உடைத்தெறிகிறார் ஹீரோ. இந்த சமயத்துல அவங்களுக்குள் ஒரு நட்பு உருவாகுது. அப்போ தான் அவங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்ல, ஒரே கிளாஸ்ல படிச்சிருக்காங்கனு தெரிய வரும். அதன்பிறகு அவங்களுக்குள் காதல் எப்படி மலருதுங்கறதை அழகா, இயல்பா சொல்லியிருக்கேன்.

ஜிகே

'ஹார்ட் பீட்' சீசன் 3ல டாக்டர் கிரணாக நடிச்சிருக்கும் சிவம் ஹீரோ. புதுமுகம் ஐக்கியா பாலகிருஷ்ணன் ஹீரோயின், இவங்கதவிர சிறுவன் கே.முகுந்தன், சிறுமி சஜ்னா, ஜிகே, ஜெயலட்சுமி இவங்களெல்லாம் நடிச்சிருக்காங்க. இசை, ஒளிப்பதிவும், தயாரிப்புனு நண்பர்கள் தான் செய்திருக்காங்க. பிரசாத்ல நடந்த திரையிடலுக்கு நிறையபேர் வந்திருந்தாங்க. எல்லாரோட ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் சீக்கிரமே பெரிய திரையில் ஒரு படம் பண்ணினடம்ங்கற ஒரு ஸ்பார்க்கை உருவாக்கியிருக்குது.'' என்கிறார் கோகுல் கிருஷ்ணா.

``என்னை ஒரு கலைஞனாகச் செதுக்கியவர்..!" - இயக்குநர் சிங்கீதம் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவ... மேலும் பார்க்க

"விடுதலை படத்தில் போலீஸ் கதாபத்திரத்தில் நடித்ததை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்"- சூரி

நடிகர் சூரி விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (அக்.4) விஜய் ஆண்டனியுடன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய சூரி, "எந்த இடத்துக்கு போனாலும் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க தோன்றும். இங்கே அப்படி தோன... மேலும் பார்க்க

மண்டாடி : 'பிரம்மிப்பா இருக்கு.!'- வாழ்த்திய சூர்யா; நெகிழ்ந்த சூரி

மதிமாறன் புகேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியான படம் 'மண்டாடி'. மீனவர்களின் வாழ்வியலையும், பாய்மரப் படகுப்போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்... மேலும் பார்க்க

Singeetam Srinivasa Rao: இயக்குநர் சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவ் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவ... மேலும் பார்க்க

Rishikanth: "எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள்..." - நெகிழும் ரிஷிகாந்த்

நீண்ட கால முயற்சிக்குப் பிறகு நடிகர் ரிஷிகாந்துக்குத் தற்போது வெற்றி நாற்காலி கிடைத்திருக்கிறது. அவர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த 'மொத ராத்திரி' மற்றும் 'டோரதி' படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல... மேலும் பார்க்க

மூடர்கூடம் : மடமையின் நுட்பம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 29

`சினி'ஸ்கோப் 29மூடர்கூடம் : மடமையின் நுட்பம்!’எங்க குப்பத்துல நான் எவ்வளவு பெரிய ஆள்னு இவனுகளுக்கு தெரியல. இங்க ஒரு மருடர்னு விழுந்துடக்கூடாதேனு கம்முனு இருக்கேன்’ என்கிறான் கன்னிஸ். அதைக் கேட்டு நம் ... மேலும் பார்க்க