செய்திகள் :

'ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை' - இரட்டைக் குழந்தையரைப் பெற்றெடுத்த ராம் சரண் - உபாசனா தம்பதி

post image

ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.

இந்தத் தகவலை ராம் சரணின் தந்தையும், டாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.

Ram Charan
Ram Charan

ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு கடந்த 2012-இல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது.

தற்போது இந்தத் தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டைக் குழந்தையர் பிறந்திருக்கின்றனர்.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் சிரஞ்சீவி, "மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் நிறைந்த இதயத்துடன், ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடெலா தம்பதி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓர் ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும். குழந்தையர் இருவரும் ஆரோக்கியமாகவும், தாயாரும் நலமுடனும் உள்ளனர்.

இந்தச் சிறிய உயிர்களை நம் குடும்பத்தில் வரவேற்பது, பாட்டி-தாத்தாக்களாக எங்களுக்குத் தூய்மையான மகிழ்ச்சியும் தெய்வீக ஆசீர்வாதமுமாகும்.

அனைவரின் பிரார்த்தனைகள், அன்பு, ஆசீர்வாதங்கள் மற்றும் நல்ல வாழ்த்துகளுக்கு மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

``சினிமா துறையில் பாலியல் சுரண்டல் இல்லை; சொந்த தவறு.!" - சிரஞ்சீவி கருத்தால் சர்ச்சை

சங்கராந்தி பண்டிகை வெளியீடாக தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'மன சங்கர வர பிரசாத் காரு' வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் சிறப்பு தோற்றத்தில் வ... மேலும் பார்க்க

Chiranjeevi: "படம் பார்த்த அந்த ஜோடி விவாகரத்து முடிவை மாற்றியிருக்கிறார்!" - சிரஞ்சீவி

சிரஞ்சீவியின் 'மன ஷங்கர வர பிரசாத் காரு' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் வெங்கடேஷும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக... மேலும் பார்க்க

The Raja Saab Review: `இது சங்கராந்தி ஃபீஸ்ட் காதுரா!' - சோதிக்கும் பிரபாஸின் ஹாரர் காமெடி சினிமா!

தாய், தந்தை அரவணைப்பின்றி பாட்டியால் வளர்க்கப்படுகிறார் ராஜூ (பிரபாஸ்). பாட்டி கங்கம்மாவுக்கு (சரினா வாகப்) ராஜூ மட்டுமேதான் உலகம்.கங்கம்மா, நீண்ட வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கணவரின் பற்றிய நினைவ... மேலும் பார்க்க