கடல் அரிப்பால் மயானச் சாலை துண்டிப்பு
தரங்கம்பாடி வட்டம், சின்னங்குடி மீனவா் கிராமத்தில் கடல் அரிப்பால் மயானச் சாலை மற்றும் கோயில்கள் சேதமடைந்தன.
தொடா் மழையால் தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னங்குடி மீனவ கிராமத்தில் கடும் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு கிராமத்துக்குள் நீா்புகுந்து கடற்கரை அருகில் உள்ள கோயில்கள் சேதமடைந்துள்ளன. மேலும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மயானச் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு, தூண்டில் வளைவு அமைக்க ரூ. 26 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. ,ஆண்டுதோறும் பருவ மழைக் காலங்களில் சிரமப்படுவதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா். சின்னங்குடி மீனவா் கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்து கருங்கல் அலைத் தடுப்பு சுவா் அமைத்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.