செய்திகள் :

கணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தவெக பெண் நிர்வாகி கைது - பிரபல ரவுடி மரணத்தில் மர்மம் விலகியது!

post image

கன்னியாகுமரி மாவட்டம் ​பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் புதூர் மணிகண்டன் என்ற சுரேஷ் (43). காவல்துறையின் பிரபல ரவுடிகள் பட்டியலில் இவரின் பெயர் இடம்பிடித்திருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய தேரூர் வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகீஸ்வரி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மணிகண்டன் முக்கியக் குற்றவாளியாவார். இதுதவிர, இவர் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவருக்கு பாரதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பாரதி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட த.வெ.க மகளிர் அணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். ​கடந்த 22-ம் தேதி இரவு நேரத்தில் திடீரென தனது கணவருக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பாரதி அவரை வடசேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பாரதி உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கும் மருத்துவர்கள் மணிகண்டன் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து, சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் இறச்சகுளத்தில் உள்ள வீட்டுக்குக் கொண்டுவந்த பாரதி, யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு, அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினார்.

கைதுசெய்யப்பட்ட த.வெ.க பெண் நிர்வாகி பாரதி

பிரபல ரவுடி மணிகண்டன் திடீரென உயிரிழந்த தகவல், மருத்துவமனை நிர்வாகம் அளித்த 'இண்டிமேஷன்' மூலம் பூதப்பாண்டி காவல் நிலைய போலீஸாருக்கு தெரியவந்தது. ரவுடிகள் பட்டியலில் உள்ள நபர் மரணமடைந்ததால் உடனடியாக இறச்சகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலிஸார் விரைந்தனர். ​மணிகண்டனின் உடலை பார்வையிட்ட போலீஸார், அவரது கழுத்துப் பகுதியில், கயிறு போன்ற ஒன்றினால் பலமாக இறுக்கப்பட்டதற்கான தழும்புகளும் காயங்களும் இருப்பதை பார்த்தனர். இது இயற்கை மரணம் அல்ல, கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்ததை அடுத்து, உடனடியாக உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல போலீஸார் முயன்றனர். அதுவரை அழுதுகொண்டிருந்த அவரது மனைவி பாரதி, "என் கணவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடமாட்டேன். மீறி எடுத்தால் தீக்குளிப்பேன்" எனப் போலீஸாரை மிரட்டினார். பாரதியின் எதிர்ப்பு போலீஸாரின் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. பின்னர், அவரை சமாதானப்படுத்திய போலீஸார், மணிகண்டனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.​மருத்துவர்கள் அளித்த உடற்கூறு ஆய்வு அறிக்கையில், மணிகண்டனின் கழுத்தில் கயிறால் பலமாக இறுக்கப்பட்டு மூச்சுத் திணறி உயிரிழந்தது உறுதியானது.

கொலைச் செய்யப்பட்ட மணிகண்டன்

மணிகண்டன் ​கொலைச் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூதப்பாண்டி போலீஸார் மணிகண்டனின் வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, மணிகண்டனின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் சம்பவத்தன்று இரவு திட்டமிட்டு அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ​கேமராக்கள் அணைக்கப்பட்டது குறித்துப் பாரதியிடம் விசாரித்தபோது, "இரவு வீட்டில் மின்சாரம் இல்லை, அதனால் கேமராக்கள் இயங்கவில்லை" என்று கூறினார். ஆனால், வீட்டில் இன்வெர்ட்டர் வசதி இருப்பதை கவனித்த போலீஸார், கேமராக்கள் மட்டும் எப்படி ஆஃப் ஆனது என கேள்வி எழுப்பியபோது பாரதியால் பதிலளிக்க முடியவில்லை. போலீஸாரின் தீவிர விசாரணையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் மணிகண்டனின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்ததை பாரதி ஒப்புக்கொண்டார். ​இதனைத் தொடர்ந்து, பாரதியை போலீஸார் கைது செய்தனர். தினமும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்ததால் கணவன் தூங்கும்போது கயிறால் இறுக்கிக் கொலை செய்ததாக பாரதி தெரிவித்துள்ளார். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பூட்டிக்கிடந்த கடைக்குள் கள்ள நோட்டு மிஷின்; ரூ.37 லட்சத்திற்கு கள்ள நோட்டுக்களை அச்சடித்த நபர்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் திரிமூர்த்தி நகரில் வசித்து வந்தவர் புஷ்பக் கிருஷ்ணா. இவர் கார்பி என்ற இடத்தில் கடை ஒன்றை வாடகைக்கு வாங்கி இருந்தார். ஒன்றரை ஆண்டுகளாக வாடகை செலுத்தி வந்தார். ஆனால் சமீபத்... மேலும் பார்க்க

சைபர் கிரைம், டிஜிட்டல் கைது... ரூ.28,000 கோடி மோசடியில் தொடர்புடைய வழக்கறிஞர் கைதான பகீர் பின்னணி

நாடு முழுவதும் இணையத்தளக் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் முழு பணத்தையும் அபகரிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நட... மேலும் பார்க்க

வாணியம்பாடி: மதுபோதையில் தகராறு; தந்தையைக் கொன்ற மகன் கைது; என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு கட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி. இவரது மகன் ராகுல் (வயது 26), தினமும் குடித்துவிட்டு போதையில் வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் க... மேலும் பார்க்க

சீர்காழி: மனைவி, மகனைக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை; மகளின் வளைகாப்பு நாளில் நடந்த கொடூரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலேந்திரன்(58) மீனவர். முன்னாள் கிராமத் தலைவர். இவரது மனைவி மலர்செல்வி(48). இவர்களது மகள் அனு(29) மகன் அதிகுணன்(25). ஜலே... மேலும் பார்க்க

ஒரு வீடியோவுக்கு ரூ.400; வாடகை ஐடியில் வலம் வந்த சிவகங்கை ரவுடிகள்! - கண்டுபிடித்த காவல்துறை

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே உள்ள மேலமங்கலத்தில் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொல்லப்பட்டார். இந்த படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: சாலையோரம் வெட்டி வீசப்பட்ட இளைஞர்; கூட்டாளிகளுடன் சிக்கிய நண்பன்; நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ஜீவா என்கிற தமிழ்வாணன். இவர் கடந்த 21-ம் தேதி இரவு, வன்னிவேடு பகுதி தேசிய நெடுஞ்சாலையோரமாக வெட்டிக் கொலை செய... மேலும் பார்க்க