செய்திகள் :

கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண்; சூட்கேசில் பிணமாக மீட்பு - போலீஸ் விசாரணை!

post image

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோடிகுமாரி. இப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஊரைச் சேர்ந்த ரிஷப்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் நட்பு அப்பெண்ணின் கணவன் வீட்டாருக்கு தெரிய வந்தது. உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பையும் மீறி ரிஷப் குமாருடன் சோடிகுமாரி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர்கள் இரண்டு பேரும் தாமன் என்ற இடத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்லவில்லை.

ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் லிவ் இன் முறையில் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்குள் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் சோடிகுமாரியை ரிஷப் குமார் படுகொலை செய்தார்.

பின்னர் சோடிகுமாரியின் உடலை டிராலி பேக் ஒன்றை வாங்கி வந்து அதில் வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போட்டுவிட்டு, ரிஷப் குமார் தப்பிச் சென்றுவிட்டார். தனியாக கிடந்த டிராலி பேக் குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அதனை திறந்து பார்த்தபோது உள்ள சோடிகுமாரியின் உடல் இருந்தது.

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் தனிப்படை அமைத்து சோடி குமாரியின் காதலன் ரிஷப் குமாரை தேடி வருகின்றனர். சோடிகுமாரி என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க