செய்திகள் :

கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது?

post image

ஈரான் போர் (பிப்ரவரி 28) தொடங்கிய 48 மணிநேரத்திற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போன்கால் பேசியுள்ளனர்.

அந்தப் போன்காலில் ஈரான் குறித்த பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப் - நெதன்யாகு
ட்ரம்ப் - நெதன்யாகு

அந்தத் தகவல்கள்...

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி டெஹ்ரானில் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தெரிய வந்துள்ளது.

முன்பு, பிப்ரவரி 28-ம் தேதி இரவு இந்தச் சந்திப்பு நடக்கவிருந்திருக்கிறது. ஆனால், பின்னர் அது காலை நேரமாக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

அதனால், இந்தச் சமயத்தில் தான் கமேனியைக் கொல்ல முடியும் என்று ட்ரம்பை சம்மதிக்க வைத்துள்ளார் நெதன்யாகு.

வரலாறு படைப்போம்!

ஏற்கெனவே ஈரானை தாக்க அமெரிக்க ராணுவத்திற்கு ஒப்புதல் அளித்திருந்திருக்கிறார் ட்ரம்ப். ஆனால், எப்போது, எப்படி என்பது மட்டும் முடிவு செய்யாமல் இருந்திருக்கிறது.

ஆக, இந்தச் சமயத்தில் நேரம் கூடி வரவே, இரு நாடுகளும் தாக்குதல் நடத்த பிளான் செய்திருக்கிறது.

'இதை விட்டால் கமேனியைக் கொல்ல நல்ல நேரம் கிடைக்காது' என்று நெதன்யாகு அழுத்தமாக ட்ரம்பிடம் பதிய வைத்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை ட்ரம்ப் செய்தால், வரலாற்றை உருவாக்குவோம் என்றும் சம்மதிக்க வைத்துள்ளார்.

காமேனி
காமேனி

கமேனி உயிரிழப்பிற்குப் பின், ஈரான் மக்களே வீதிக்கு வந்து போராடி, அந்த ஆட்சியை அகற்றுவார்கள் என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஆக, நெதன்யாகு தான் ட்ரம்பை ஈரான் போரை தொடங்க வைத்ததற்கு முக்கிய காரணம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால், நெதன்யாகு ஆரம்பத்தில் இருந்து, ட்ரம்பை தான் இந்தப் போருக்கு அழைக்கவில்லை என்று கூறி வருகிறார்.

ட்ரம்புமே 'நான் தான்' ஈரான் போர் குறித்து முடிவு செய்தேன் என்று கூறுகிறார். இந்த நிலையில் தான், இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தட்டுப்பாடு; சிலிண்டரில் சமையல் எரிவாயு அளவு 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைகிறதா?

தற்போது ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறி இருக்கின்றன. அதோடு உணவு பொருட்களின் வில... மேலும் பார்க்க

"மாப்ள அவர்தான். ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை.!"- எடப்பாடியை சாடிய ஐ.பெரியசாமி

"அதிமுகவுக்குத் தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலைக் காட்டி நின்ற இடத்தில் பாஜகவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று விமர்சித்து திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரிய... மேலும் பார்க்க

`நாகப்பட்டினத்தை விசிக-வுக்கு தராதீர்கள்' - நிர்வாகிகள் கோரிக்கை - ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?

திமுக-வில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நடைபெற்ற நேர்காணல் நேற்றுடன் நிறைவு பெற்றது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தொகுதி வாரியாக நேற்று நேர்... மேலும் பார்க்க

"மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்"- புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி; திருமா முடிவின் பின்னணி என்ன?

சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் என ஐந்து மாநிலங்களில் நடக்க இருக்கிறது. இதில் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள்! - கையெழுத்தானது ஒப்பந்தம்!

தொகுதி பங்கீட்டில் இழுபறியாக நீடித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு கட்சியையும் அழைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறது திமுக. அந்தவகையில், இன்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவாலயத்தில் முதல்வர்... மேலும் பார்க்க

"அடிமைகளைப் பிடித்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கும் மோடி, அமித்ஷா கனவு பலிக்காது" - உதயநிதி தாக்கு

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் உதயநிதி தலைமையில் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியை... மேலும் பார்க்க