கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை
கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக கருப்பட்டி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கொம்பையா(56). கருப்பட்டி வியாபாரியான இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.