செய்திகள் :

கயிறு இழுக்கும் போட்டியில் நிலைத்தடுமாறி விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்; சுதாரித்த காவலர்கள்!

post image

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகில் உள்ள ஹோலி கிராஸ் தனியார் பள்ளியில் விளையாட்டு விழா போட்டிகள் இன்று நடைபெற்றன. அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்கிற முறையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு விழா போட்டிகளைத் தொடங்கி வைத்துள்ளார். விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

லோகேஷ் தமிழ்செல்வன்

இதில் முன்னாள் மாணவர்கள் அணி சார்பில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சக நண்பர்களுடன் பங்கேற்றுள்ளார். அப்போது திடீரென கயிறு அறுந்ததால் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டுப் பதறிய காவலர்கள், உடனடியாக அவரை தூக்கியுள்ளனர். இதில் காயங்கள் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை என்பதால் மீண்டும் விளையாட்டு விழா போட்டிகளில் கவனம் செலுத்தியிருக்கிறார். கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்று அமைச்சர் நிலைத்தடுமாறி கீழே விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க