செய்திகள் :

கரூர்: சொத்துவரி மதிப்பை குறைத்து மதிப்பிட ரூ.3,000 லஞ்சம்; மாநகராட்சி வரி ஆய்வாளர் அதிரடி கைது!

post image

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது மண்டல அலுவலகத்தில் வரி ஆய்வாளராக(பில்கலெக்டர்) பணியாற்றுபவர் யோகேஸ்வரன்(வயது: 35). இவரிடம் காந்திகிராமத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய வீடு கட்டி வருவதாகக் கூறி, வீட்டிற்கான சொத்து வரி மதிப்பு கேட்டு கடந்த வாரம்  விண்ணப்பித்துள்ளார். அப்போது, சொத்து  வரி மதிப்பை குறைத்து  தருவதாகவும், அதற்கு ரூ.3,000 லஞ்சம் தரவேண்டும் என அவரிடம் யோகேஸ்வரன் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்காத அவரிடம், 'காசு கொடுக்கவில்லை என்றால், வேலை நடக்காது' என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் பாதிக்கப்பட்ட நபர் புகார் செய்துள்ளார். அப்போது, போலீஸார் ரசாயனம் பவுடர் தடவிய  ரூபாய்  நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர்.

karur

இதையடுத்து, யோகேஸ்வரனிடம் லஞ்சப்பணம் ரூ.3,000-த்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜான் தலைமையிலான போலீஸார் யோகேஸ்வரனை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர், அவரை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்துவரி மதிப்பை குறைத்து மதிப்பிட லஞ்சம் கேட்ட ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி: 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை! - நீதிமன்றம் அதிரடி

திருச்சி, பாலக்கரை அருகே உள்ள தர்மநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் சூசைநாதன் (வயது: 56). இவர், ஜீயபுரம் அருகே உள்ள போதாவூர் அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவரது வகுப்பில் படித்த 7 வயது... மேலும் பார்க்க

திருச்சி: வியாபாரியிடம் நூதன முறையில் மோசடி; போலி SMS-ஐ நம்பி லட்சங்களைப் பறிகொடுத்த பரிதாபம்

திருச்சி, வயலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோ பிராங்க் சுரேந்திரன். இவர், பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் வயலூர் ரோடு பகுதியிலுள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எ... மேலும் பார்க்க

குடியாத்தம்: திருமணம் மீறிய உறவில் திடீர் விரிசல்; காதலன் அடித்துக் கொலை; 4 பெண்களிடம் விசாரணை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கதிரவன் (வயது 40). திருமணமாகாதவர். அம்பேத்கர் நகருக்கு அருகிலுள்ள அருணாச்சல நகர் பகுதியில் வசிக்கும் 35 வயதான வேறொருவரின் மனைவ... மேலும் பார்க்க

காதலனோடு சேர்ந்து கணவனை கொன்று டிரம்மில் வைத்து மூடிய மனைவி - மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த ஆண்டு நடந்த டிரம் படுகொலை நாடு முழுவதும் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. கப்பலில் வேலை செய்த கணவன் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது அவரை காதலன் துணையோடு கொ... மேலும் பார்க்க

திருமணம் கடந்த உறவிலும் சந்தேகம்; கொன்று புதைக்கப்பட்ட பெண்! - தருமபுரி அதிர்ச்சி

தருமபுரி மாவட்டம் கடத்தூர்... அக்டோபர் 12-ஆம் தேதி காலை... கடத்தூர் 4-வது வார்டு குடியிருப்புவாசிகள் தங்கள் அன்றாட பணிகளுக்காக அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தபோது அத்தெருவில் காலியான இடத்திலிருந்து த... மேலும் பார்க்க

கேரள யூத வழிபாட்டுத் தலத்திற்கு தீ வைப்பு; ஒருவர் கைது; பாகிஸ்தான் 'பாஸ்' குறித்து என்.ஐ.ஏ விசாரணை!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான கடவும்பாகம் யூத வழிபாட்டுத் தலத்தின் நுழைவு வாயில் அருகே, கடந்த 12-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் காரில் வந்த நபர் ஒருவர் அ... மேலும் பார்க்க