செய்திகள் :

கரூர்: `நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக அரசு பணி வழங்கலாம்' - உயர் நீதிமன்றம்

post image

கரூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழ்நதவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் விஜய் கருணை அடிப்படையிலான அரசு பணி நியமன ஆணைகளை வழங்கவிருக்கிறார்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், 'கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்குவது விசாரணையை பாதிக்கும் என்பதோடு சாட்சிகள் கலையவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை.  கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே சிபிஐ விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டிருக்கிறது.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுக்கள்  மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு அவர்களுக்கு பொருளாதார உதவி தேவை தானே? அரசின் கொள்கைகளில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. ஆனாலும் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை தற்காலிக பணி வழங்கலாம்" எனக்கூறி வழக்கின் விசாரணையை 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சியையும் நீதிமன்றமே தாமாக முன்வந்து இணைத்துள்ளது குறிப்பிடதக்கது.

ITR Filing சீசன் இது; இன்னும் ஆதார் - பான் எண்ணை இணைக்கவில்லையா? என்ன, எப்படி செய்யலாம்? | How to

ஆதார் கார்டும், பான் கார்டும் இணைக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பான் கார்டு செல்லாது என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வலியுறுத்தல் எப்போது முக்கியமோ, இல்லையோ, இப்போது இதை கட... மேலும் பார்க்க

PF: ரூ.5 லட்சத்திற்கு Auto settlement, 75% பணம் எடுக்கலாம், கூடுதல் வட்டி - EPFO புது அப்டேட் லிஸ்ட்

சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி வலைதளம் மற்றும் அதன் ஆப்பான UMANG அப்டேட் செய்யப்பட்டது. இந்த அப்டேட் மூலம் என்னென்ன விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்...> புதிய CITES திட... மேலும் பார்க்க

`நடுநிலைப் பள்ளிகளில் 0% Dropout Rate; தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அபாரம்!' - UDISE அறிக்கை விவரம்

மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் (UDISE) புதிய அறிக்கையில், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் இருப்பு, உள்கட்டமைப்பு மற்றும்... மேலும் பார்க்க

சுயதொழில் தொடங்க ஆசையா? - தமிழ்நாடு அரசின் 4 அதிரடி தொழில் மேம்பாட்டுப் பயிற்சிகள் - முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள தனது வளாகத்தில், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக பல்வேறு குறுகிய கால தொழில் மேம்பாட்... மேலும் பார்க்க

தமிழ்நாடு மின்துறையில் நுழையும் AI: சென்னை ஐஐடி-யுடன் கைகோக்கும் மின்வாரியம்! - பலன் என்ன?

தமிழக மின்கட்டமைப்பை தரம் உயர்த்தி, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ... மேலும் பார்க்க

Nalam AI: தவெக அரசின் நலம் ஏஐ சாட்போட்; பயன்படுத்துவது எப்படி? - முழு விவரம்!

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட "நலம்AI" என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள்... மேலும் பார்க்க