BB Tamil 9: "துஷாரை நீ லவ் பண்றீயா.?" - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள்
கர்நாடகா: பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 17 பேர் உயிரிழந்த சோகம்
கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதியதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே தனியார் பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

பேருந்து தீப்பற்றி எரிய தொடங்கி இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார், தீயணைப்புப் படையினர் விரைந்தனர்.
நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பற்றியதால்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் தற்போது வரை 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
பலத்தக் காயம் அடைந்து மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்து அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்து இருக்கிறது. இந்த விபத்துக்கு லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.




















