செய்திகள் :

TVK : `ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி' - தஞ்சை கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்!

post image

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று (புதன்கிழமை - மாா்ச் 4) நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து காரில் செங்கிப்பட்டி வந்தார்.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

விஜய் vs ஸ்டாலின் சார்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், ``வேலூர் நிர்வாகிகள் சந்திப்பில் நான் தான் தமிழ்நாடு என்றுக் கூறியிருந்தேன், தமிழ்நாட்டு மக்களின் ஒரே உண்மையான பிரதிநிதியாக நாம்தான் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே. தமிழ்நாடு vs ஸ்டாலின் சார்... அதாவது விஜய் vs ஸ்டாலின்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்.. இதில் எப்படி பா.ஜ.க வந்தது எனக் கேள்வி கேட்டிருந்தேன். அதையும், விஜய் பாஜகவுக்காகப் பேசுகிறார் எனத் திரித்துப் பேசினார்கள். நம் சிறுபான்மைச் சகோதரர்களை ஏமாற்றும் வேலை இனி செய்ய முடியாது என்பதைத் தெரிந்து திரித்துப் பேசும் வேலையைச் செய்கிறார்கள்.

சென்னையில் டெல்லி டெல்லி எனப் பேசுவதும், அடித்தக் கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் அதே டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பதும் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டைக் காப்பது, பிழைக்க வைப்பது திமுக ஸ்டாலின்தான் எனப் பேசுவது வேலைக்கு ஆகாது. இப்போது சிறுவர்கள் கூட ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி எனச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

தமிழ்நாட்டு அணி டெல்லி அணி எனப் பேசுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணி தொட்டுக்கூடப் பார்க்க முடியாது." என்றார்.

(More Details will Updated here)

"தனிப்பட்ட முறையில் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், ஆனால்.!"- மாணிக்கம் தாகூர் சூசகம்

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். மாணிக்கம் தாகூரும் அதிரடி பதி... மேலும் பார்க்க

`மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும்' - தாக்கரேயிடம் கெஞ்சும் காங்கிரஸ்!

ராஜ்ய சபையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்பட... மேலும் பார்க்க

பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா | ‘வாவ்’ வியூகம் 08

பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா‘வாவ்’ வியூகம் 08தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,77,38,925 ஆண்கள், 2,89,60,838 பெண்கள், 7,617 இதர வா... மேலும் பார்க்க

'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?

வரலாற்றில் முதல்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 92 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே - ஒன்று, உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை. இன்னொன்று, வளைகுடா நாடுகளில... மேலும் பார்க்க

மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! - மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி?

ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி அவரது பதவியை ஏற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின... மேலும் பார்க்க