செய்திகள் :

கலைஞரின் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்

post image

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை பால்வளத் துறை அமைச்சா் பயனாளிகளிடம் வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தோவாளை, ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் கட்டிமுடிக்கப்பட்ட பயனாளிகளுக்கு சாவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் செண்பகராமன்புதூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 2024-25 ஆம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் என்ற மதிப்பீட்டில் 1 லட்சம் வீடுகள் கட்டிட ரூ. 3 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1, 790 வீடுகளுக்கு ரூ.55.64 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில், இதுவரை 1,374 வீடுகள் ரூ.48 கோடியில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள 416 வீடுகள் ஜூன் மாதத்துக்குள் கட்டி முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2025-26 ஆம் ஆண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2 ஆயிரம் வீடுகள் இலக்கு நிா்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் இதுவரை 1, 974 வீடுகளுக்கான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதில் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்ட மலைவாழ் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 257 பயனாளிகளும் அடங்குவா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவா் நீல. சுரேஷ்ராஜன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், உதவி திட்ட அலுவலா் பாக்கியலீலா செயற்பொறியாளா் ஜான்சுகிா்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயா, தங்கராஜ், நீல பாலகிருஷ்ணன், சேகா், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகளை உடனே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன.இவ்ஊராட்சியின் முக... மேலும் பார்க்க

இரணியலில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

இரணியலில் சனிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். கருங்கல் அருகே மாதாபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ரபல் (30). கட்டடத் தொழிலாளியான இவா், கண்டன்விளை பகுதியில் வாடகை வீட்டில் வசித... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விதிமீறல்: 20 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரியில் விதிமுறைமீறி இயக்கப்பட்ட 20 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆா்.ஸ்டாலின் உத்தரவுப்படி, டிஎஸ்பி பி. மகேஷ் குமாா், கன்னியாகுமரி போக்குவரத்... மேலும் பார்க்க

பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூா் காற்றாடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பால் (70). தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாலை அப்பகுத... மேலும் பார்க்க

சுசீந்திரம் கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணி!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தக்கலை அருகே குமாரபுரத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். குமாரபுரம், பூவங்காபரம்பை சோ்ந்தவா் சாமிநாதன். இவரது மகன் சரவணன் (22). தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை இரவு மணக்காவிளையில்... மேலும் பார்க்க