செய்திகள் :

கல்லூரிக்குச் சென்ற மாணவியை தடுத்து ஊர் சுற்றிய வாலிபர் - போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு!

post image

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி விடுமுறையில் ஊருக்கு வந்த அந்த மாணவி கடந்த 9-ம் தேதி மீண்டும் கல்லூரிக்கு செல்வதற்காக சிராயன்குழி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆம்னி பஸ்சில் கிருஷ்ணகிரி சென்றார். மகள் கல்லூரிக்கு சென்றதை உறுதி செய்வதற்காக மகளின் செல்போனை பெற்றோர்கள் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கல்லூரியை தொடர்பு கொண்டு விசாரித்த போது மகள் கல்லூரிக்கு செல்லவில்லை என்பது உறுதியானது. இதனையடுத்து அந்த மாணவியின் தாய் தக்கலை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாணவி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த மாணவியின் செல்போன் இரண்டு தினங்களுக்கு முன் ஆன் செய்யப்பட்டது. அந்த செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்த போது மாணவி கிருஷ்ணகிரியில் இருப்பது தெரியவந்தது.

போக்ஸோ புகார் (சித்திரிப்புப் படம்)

இதனையடுத்து கிருஷ்ணகிரி சென்ற போலீஸார் மாணவியை அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து அவரை அழைத்து கொண்டு தக்கலை காவல் நிலையம் வந்தனர். காவல் நிலையத்தில் வைத்து மாணவியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் தக்கலை பஸ்நிலையத்தின் பின்புறமுள்ள ராமன் பறம்பு பகுதியை சேர்ந்த அஜ்மல் (வயது-21) என்பவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. ஏற்கனவே அந்த கல்லூரி மாணவியோடு அஜ்மலுக்கு பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக மாணவி கிருஷ்ணகிரிக்கு செல்வதை அறிந்த அஜ்மல் மாணவி சென்ற அதே பஸ்ஸில் கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். மாணவியுடன் கிருஷ்ணகிரியில் இறங்கிய வாலிபர், அவரை கல்லூரிக்கு செல்லவிடாமல், தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். மாணவிக்கு அந்த வாலிபருடன் ஏற்கனவே பழக்கம் இருந்ததால் பல்வேறு இடங்களில் இருவரும் சுற்றியுள்ளனர்.

அஜ்மல்

இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட அஜ்மலின் நண்பர்கள் அவருக்கு தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து மாணவியை கல்லூரிக்கு அனுப்பி வைத்துவிட்டு அஜ்மல் ஊருக்கு வந்துள்ளார். ஒன்றும் தெரியாதது போல் வீட்டில் இருந்த அஜ்மலை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவியின் வயதை கணக்கில் கொண்டு இந்த வழக்கு மார்த்தாண்டம் மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து மாணவியை அழைத்து சென்ற வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் அஜ்மலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இரண்டாவதும் பெண் குழந்தை... பிறந்த அன்றே புதைக்கப்பட்ட கொடூரம் - தந்தை, தாத்தா உட்பட 3 பேர் கைது!

ராமேஸ்வரம், சம்பை பகுதியைச் சேர்ந்த நாகபாண்டி (30) இவருக்கும், லோகநந்தினி (23) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலை... மேலும் பார்க்க

அரியலூர்: காணாமல் போன 3 வயது சிறுமி - 5 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!

அரியலூர் மாவட்டம், புங்கங்குழி ஊராட்சிக்குட்பட்ட சிலுப்பனுர் கிராமத்தில் வசிப்பவர்கள் மணிமாறன்-சரிதா தம்பதி. இவர்களது மூன்று வயது பெண் குழந்தை நிவிஷ்னா. நேற்று தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ம... மேலும் பார்க்க

`கொலையான ஆசிரியை குடும்பத்திற்கு இழப்பீடு என்னாச்சு?'- எஸ்.பிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றியவர் ரமணி. இவரை காதலித்து வந்த மதன்குமார் என்பவர் ரமணி திருமணத்திற்கு மறுத்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு நவ.20ம்... மேலும் பார்க்க

மதுரை: சிகிச்சைக்கு சென்ற பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர்?- கைதுசெய்ய கோரி போராட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது கணவர் சென்னையில் காவல்துறையில் பணிபுரிந்துவருகிறார்.இந்நிலையில் தன் குழந்தைக்கு சளி என்பதால் தனது குடும்ப மருத்துவரான விருது... மேலும் பார்க்க

சென்னை: மறுமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஜினீயர் - சிக்கியது எப்படி?

மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அவர் கணவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அவர் படித்துக் கொண்டே வேலை செ... மேலும் பார்க்க

ஆரணி: செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்புடையவர் படுகொலை - மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொடூரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஆவியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் `கட்டை’ குணா என்கிற குணசேகரன். இவர் மீது வனத்துறையில் செம்மரக்கட்டை கடத்தல் போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூற... மேலும் பார்க்க