செய்திகள் :

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்: 'ஆட்சியரிடம் இருந்து புகார் வரவில்லை'- காவல்துறை தரப்பு விளக்கம்!

post image

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஆட்சியர் தரப்பில் எந்த ஒரு பதிலும் சொல்லப்படாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து, 7 நாள்களுக்குள் நடவடிக்கை அறிக்கை அளிக்கத் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணையம்
தேசிய மகளிர் ஆணையம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவுசெய்யவும் டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் ஆட்சியரின் புகாரை எதிர்பார்க்காமல் விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதையும் அவர் தன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று (நவ. 23) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "வெறும் செய்திகளின் அடிப்படையில் மட்டும் காவல்துறைக்கு எப்படி உத்தரவிட முடியும்? ஆட்சியர் தரப்பில் ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? அல்லது அதற்கான ஆதாரங்கள் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்குக் காவல்துறை தரப்பில் இருந்து, ``மாவட்ட ஆட்சியர் இதுவரை யாரிடமும் புகார் அளிக்கவில்லை" என்று பதிலளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ- வை அனைத்து உயரதிகாரிகளும் பாதுகாப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், புகார் எதுவும் இல்லாததால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கப் போவதில்லை என நீதிபதி தெரிவித்திருக்கிறார். இருப்பினும், குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது உண்மையெனில் அது துரதிஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இது தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரின் கருத்தைக் கேட்டு விளக்கம் அளிக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`பாமக ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் 70% பிரச்னைகளைத் தீர்ப்போம்!’ - அன்புமணி சொல்வதென்ன?

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி, ``மேகதாதுவில் அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. உச்ச நீதிமன்ற... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: `தீர்ப்பை அமல்படுத்துவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்?' - நயினார் கேள்வி!

கரூரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் தீப... மேலும் பார்க்க

'மீனவர் நலத்துறைக்கு வேற ஆளே இல்லையா?' - அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராக கொதிக்கும் மீனவர்கள்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரான ஸ்ரீநாத் தன்னுடைய துறைசார்ந்த மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளை கூட கண்டுகொள்வதில்லை. 'மீனவர்களின் நலனில் துளிகூட அக்கறை இல்லாத இவரை ஏன் மீனவர்நலத்துறை அமைச்ச... மேலும் பார்க்க

`ஜெயலலிதாவிடம் இருந்த அதே ஆளுமைத் திறனுடன் திரிஷா உள்ளார்' - நெல்லையில் தொடங்க்பபட்ட 'திரிஷா பேரவை'

நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு, ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான லோகோ வெளியீட்டு விழா நெல்மை பத்திரிகையளர் மன்றத்தில் இன்று நடைபெறரது. அமைப்பின் ... மேலும் பார்க்க

'உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' - கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் குறித்து அருண்ராஜ்

சென்னையில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் அளித்த அவர், " இதுகுறித்... மேலும் பார்க்க

'ஆபத்தை சமாளிக்க...' - ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்! - காரணம் என்அன?

தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முதல்வர் விஜய் தன்னுடைய முகாம் அலுவலகத்தில் நடத்தவிருக்கிறார்? இந்த திடீர் கூட்டத்தின் பின்னணி என்ன? TVK Vijay | த.வெ.க - முதல்வர் விஜய்... மேலும் பார்க்க