செய்திகள் :

கள்ளக்குறிச்சி: தவெக MLA-வுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உட்பட 3 பிரிவுகள்! முழு விவரம்

post image

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறப்படும் விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து, 7 நாள்களுக்குள் நடவடிக்கை அறிக்கை அளிக்கத் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில் சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், ``கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்தித்தாள்கள், செய்தித் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருள் விக்னேஷ் - விஜய்
அருள் விக்னேஷ் - விஜய்

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொதுவெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆரம்பத்திலிருந்தே இந்தக் குற்றச்சாட்டை வெறும் வதந்தி என்றே குறிப்பிட்டு வந்த தவெகவைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும், `இது தொடர்பாக எங்களுக்கு ஆட்சியர் தரப்பிலிருந்து எந்தப் புகாரும் வரவில்லை' என ஊடகங்களில் பேசிவந்தனர். அதே பதிலை நேற்று கூட நீதிமன்றத்திலும் உறுதிப்படுத்தியது தமிழக அரசு.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) முறையான புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளைக் கேட்டு நாளைக்குள் விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணை நாளை நடைபெறும் என நேற்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியுடன் தான் நடத்திய கலந்துரையாடல் குறித்த எழுத்துப்பூர்வமான குறிப்பை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

அருள் விக்னேஷ் விவகாரம்
அருள் விக்னேஷ் விவகாரம்

மேலும், அதிகாரியின் புகாரின் பேரில் தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி BNS 75, 78, 79 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் கசிந்திருக்கிறது.

பாலியல் நோக்கமுள்ள இரட்டை அர்த்தப் பேச்சுகள் அல்லது கருத்துகள் தெரிவிப்பது, பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக ஆபாசக் காட்சிகளைக் காட்டுதல், பெண் விருப்பமில்லை என்று தெளிவாகத் தெரிவித்த பிறகும் தொடர்ந்து பின்தொடர்வது, மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள முயற்சிப்பது. இணையம், மின்னஞ்சல் அல்லது பிற மின்னணு தகவல் தொடர்புகளைத் தொடர்ந்து கண்காணிப்பது, பெண்ணை அவமதிக்கும் நோக்கத்துடன் வார்த்தைகளைப் பயன்படுத்துதல், பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைதல் ஆகியவை இந்த பிரிவில் உள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேபோல BNS 75 ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.!

திருபரங்குன்றம்: "மீண்டும் எமர்ஜென்சி காலமா? - பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைத்திருப்பது குறித்து எல். முருகன்|LIVE

தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுதிருப்பரங்குன்றம் தீப துணை ஆய்வு செய்ய தொல்லியல் துறை அதிகாரிகள் மலைக்கு சென்றனர். திருப்பரங்குன்றத்தில் மீண்டும் ஒரு எமர்ஜென்சி காலமா?- எல். முருகன் ஜனநாயகத்தின் குரலை ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "தீபம் ஏற்றவில்லை என்றால் விஜய்யை கிறிஸ்துவராகத்தான் பார்க்க முடியும்" - நயினார்

'கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ.24) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ளலாம்' என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. கூடவே கடுமையான ... மேலும் பார்க்க

"ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத் தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?"- உதயநிதி காட்டம்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தேசிய ... மேலும் பார்க்க

அருள் விக்னேஷ் மீது FIR: ``அரசு வழக்கறிஞரே, யாரையும் பாதுகாக்க முயற்சிக்காதீர்கள்" - உயர் நீதிமன்றம்

சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், `` கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்ச... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: ``துணிச்சல்' மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்" - எம்.பி கனிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பானது. இந்த விவகாரம் குறித்து பேசிய அருள் விக்னேஷ், ``இப்படி ஒரு சம்பவம் ந... மேலும் பார்க்க

"திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுகிறார்களா என பார்க்கச் செல்வேன்" - நயினார் நாகேந்திரன் அதிரடி

திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், நேற்று அந்த மனு விசாரிக்கப்படாத நிலைய... மேலும் பார்க்க