செய்திகள் :

'கள்ள மௌனத்தை கலையுங்கள் முதல்வர் விஜய்!'

post image

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட கலெக்டரை தொல்லை செய்யும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அந்த எம்.எல்.ஏவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கின்றனர். மகளிர் அமைப்புகள் வீதியில் இறங்கி போராடுகின்றனர்.

அருள் விக்னேஷ்
அருள் விக்னேஷ்

இதோ இப்போது தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் உறுதியாக நடவடிக்கை எடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டிய முதல்வர் விஜய் இன்னமும் வாய் திறக்கவில்லை.

முதல்வர் விஜய்க்கு பொதுவாகவே வெளியில் பேசும் வழக்கம் கிடையாது. ஊடகங்களை அருகிலேயே சேர்க்கமாட்டார். அவரது கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே பேசுவார். இது அவரது பழக்கம். ஆனால், இந்த விஷயத்திலும் அதே பாணியை பின்பற்றுவது ஏற்புடையதாக இல்லை. இந்த சுபாவம் அவர் பேசிய அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கே எதிராக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக ஆளும் திமுக அரசின் மீது விஜய் இரண்டே இரண்டு விஷயங்களைத்தான் பெரும் குற்றச்சாட்டாக முன்வைத்தார். ஒன்று, சட்டம் ஒழுங்கு பிரச்னை. இன்னொன்று பெண்கள் பாதுகாப்பு.

TVK Vijay
TVK Vijay

திமுக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தவெக ஆட்சி அமைந்தால் பெண்கள் பாதுகாப்பில் சுணங்கவே மாட்டோம். பெண்கள் பாதுகாப்புக்குதான் முன்னுரிமை கொடுக்கப்படும் என விஜய் பேசினார். பதவியேற்பு விழாவிலும் பெண்கள் பாதுகாப்பில் உறுதியாக இருப்போம் என்றார். ஆட்சியமைத்த சில நாட்களிலேயே 'சிங்கப்பெண் அதிரடிப்படை' என ஒரு திட்டத்தை அறிவித்து, அதை தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் கூறி விஜய் பெருமிதப்படுகிறார்.

சட்டமன்றத்தில் பேசும் போது கூட, 'என்னுடைய அம்மாக்கள் அக்காக்கள் தங்கைகளைப் பற்றி யாராவது அவதூறாக பேசினால், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்போம்' என ஆவேசமாக சூளுரைத்தார். பெண்கள் பாதுகாப்பையும் பெண்களின் கண்ணியத்தையும் பிரதானமாக பேசியிருக்கிறார். அவர் ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாதிரியான சம்பவம் நடக்கும் போது, அதில் விஜய் துரிதமாக நடவடிக்கை எடுப்பார் என நம்புவது அடிப்படையான எதிர்பார்ப்பு. ஆனால், விஜய் அதற்கு தயாராகவே இல்லை. உடனே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றச் சொல்லி யாரும் கேட்கவில்லை. நியாயமான விசாரணையைத்தான் அனைவரும் கோருகின்றனர்.

ஆனால், விஜய்க்கு பதிலாக பேசும் தவெக அமைச்சர்களோ கோக்குமாக்கான லாஜிக்குகளை முன்வைக்கின்றனர். ஒரு அமைச்சர், 'கலெக்டர் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்' என்கிறார். பெண்கள் மீதான தொல்லை சார்ந்த பிரச்னைகளில் பெண்கள் தாமாக முன்வந்து புகார் கொடுக்க வேண்டுமென கூறுவதே அபத்தம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தயக்கம் இருக்கும்பட்சத்தில் அவர்களின் கண்ணியம் குறையாமல் ரகசியம் பாதுகாக்கப்பட்டு புகார் அளிக்க நம்பிக்கை கொடுத்து விசாரணையை தொடங்க வேண்டும். அதைவிடுத்து பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தால்தான் நடவடிக்கை என்பது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலே.

இன்னொரு அமைச்சர், 'அப்படி எந்த விஷயமும் நடக்கவே இல்லை. எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றனர்' எனப் பேசியிருப்பதோடு அவர் இப்படி செய்யவில்லையா இவர் அப்படி செய்யவில்லையா என குற்றத்துக்கு நியாயம் கற்பிக்கவும் முயல்கிறார். விசாரணை எதுவும் நடக்காத சூழலில் அதற்குள்ளாக எப்படி முடிவுரை எழுத முடிகிறது?

TVK Vijay - விஜய்
TVK Vijay - விஜய்

தவெக எம்.எல்.ஏ தவறே செய்யாதபட்சத்தில் தனியார் ரெசார்ட்டில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஏன் அவரை தனியாக அழைத்து கண்டித்தார்? முதல்வர் அருள் விக்னேஷை கடுமையாக கண்டித்ததாக அத்தனை ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதற்கு தவெக கட்சி சார்பில் எந்த மறுப்பும் வெளியாகவில்லையே . முதல்வர் அழைத்து கண்டித்தது உண்மையெனில், இந்த விவகாரத்தை நான்கு சுவருக்குள் யாருக்கும் தெரியாமல் கண்டித்தால் மட்டும் போதுமென முதல்வர் நினைக்கிறாரா?

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தை தவெக கையாளும் விதம் மற்ற எம்.எல்.ஏக்களுக்கு என்ன மாதிரியான செய்தியை எடுத்து சொல்லுமென விஜய் யோசித்ததை போன்றே இல்லை. 'பெண்கள் பாதுகாப்பில் சமரசமே இல்லை' எனக் கூறிய முதல்வரின் இந்த மௌனம் கள்ள மௌனமாகவே பார்க்கப்படும். 234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டியிடுகிறேன் என்றார். மக்களும் விஜய்யின் முகத்துக்காகதான் 108 தொகுதிகளில் வெற்றியை கொடுத்தார்கள். ஆக, இப்போதைய பிரச்னைகளுக்கான தார்மீக பொறுப்பையும் விஜய்தான் ஏற்க வேண்டும். விமர்சனங்களுக்கு விஜய்யும்தான் பதில் சொல்ல வேண்டும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விஷயத்தில் மக்கள் எதிர்பார்ப்பது முதல்வர் விஜய்யின் வெளிப்படையான பதில் மட்டுமே.

மௌனம் கலையுங்கள் விஜய்!

`வேல்முருகனின் அரோகரா முழக்கம்: முதல்வரை ஒப்பிட்டு துதி பாட யார் அனுமதி வழங்கியது?' டிடிவி கண்டனம்

திருச்செந்தூர் கோயிலில் நேற்று (நவ.15) நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, முருகப்பெருமானுடன் தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்ட இயல் இசை நாடக மன்றத் தலைவர... மேலும் பார்க்க

'அன்றைக்கு கிண்டல் பேசிய ரஜினிகாந்த்... ஹலோ மிஸ்டர் எக்ஸ் சீஃப் மினிஸ்டர்..!'-வைகோ பேசியதென்ன?

நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.``முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர... மேலும் பார்க்க

தலித் + இஸ்லாமியர் = 40% வாக்குகள்; சவாலான களத்தில் பாஜக எப்படி வெல்கிறது? | UP Election Explained

2027-ல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் புதிய பிளவுகளும் போட்டி அணிகளும் உருவாகியுள்ளன. ஆளும் பாஜகவை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவிடாமல் த... மேலும் பார்க்க

``தவெக ஆட்சியில் விசிக அமைச்சரும் Reels எடுத்தே தீர வேண்டுமா?" - டிடிவி தினகரன் கேள்வி!

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நவம்பா் 10-ம் தேதி நலத்திட்ட உதவி மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசை முதுமலை புலிகள் காப்பகத்தில் தடை செய்ய... மேலும் பார்க்க

``14 ஆண்டுகால திருமண உறவை முடிவுக்கு கொண்டு வருகிறோம்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்ஸி பதிவு!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடனான திருமண உறவை முடிவுக்கு கொண்டுவருவதாக அவரின் மனைவி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``14 ஆண்டுகளாக ஒருவரையொருவர் வாழ்வில் பங்கெடுத்துக்... மேலும் பார்க்க

'எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கே.என்.நேருவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்' - கனிமொழி

கே.என்.நேருவின் இல்லத்திருமண விழா இன்று (நவ.16) நடைபெற்றது. இந்தத் திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுகவினர் பலரும் கலந்துகொண்டனர். அந்தவகையில் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு பேசி... மேலும் பார்க்க