செய்திகள் :

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து; "மேல்முறையீடு செய்க" - திருமா

post image

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர் மீதானக் குற்றப் பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விசிக தலைவர் தொல். திருமாவளனும் குற்றப் பத்திரிகையை ரத்து செய்ததற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கவின்
கவின்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "நெல்லை கவின் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் (ஏ1) பெற்றோர் சரவணன்(ஏ2) கிருஷ்ணகுமாரி(ஏ3) ஆகியோர் மீதான 'குற்றச்சாற்று அறிக்கையை' மதுரை உயர்நீதிமன்றம் 'ரத்து' செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வதுதான் நீதிமன்றத்துக்குள்ள அதிகாரம். குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன்னரே குற்ற அறிக்கையை 'ரத்து' செய்வது 'தவறான முன்மாதிரி' ஆகும்.

கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் பிணையில் (ஜாமீனில்) வெளியே வந்ததும் இன்னொரு கொலை வழக்கில் கூலிப்படையினரோடு தொடர்பிருப்பதாக மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரையும் அவரது மனைவியையையும் குற்றமற்றவர்கள் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வகையில் உயர்நீதிமன்ற நடவடிக்கை அமைந்துள்ளது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை
மதுரை உயர் நீதிமன்றக் கிளை

இந்நிலையில், தமிழ்நாடு அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திட ஆவண செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து - உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால், கடந்த 2025 ஜூலை 27 ஆம் தேதி அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் வெட்டி படுகொலை செய்ய... மேலும் பார்க்க

`'மாமா' என்று நீ அழைத்த நபர் உனக்கு மிக மோசமான செயலைச் செய்தார்; ஆனால் நீ..!' - நெகிழ வைத்த தீர்ப்பு

டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 2023ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சுமித் என்பவர் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்க... மேலும் பார்க்க

`2,700 மதிப்புள்ள புற்றுநோய் மருந்து 27,000-க்கு விற்பனை; இது பகல்கொள்ளை'- உச்ச நீதிமன்றம் கண்டனம்!

உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்த வழக்கின் விசாரணையின்போது, மருந்து நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் அநியாய லாபக் கொள்ளையைச் சுட... மேலும் பார்க்க

சிபிஐ-க்கு அவகாசம்; `ஜாமீன்' இடைக்காலத் தடை நீடிப்பு: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்து அவர்களை மீண்டும் காவலில் அடைக்கக் கோரும் சி.பி.ஐ-யின் கோரி... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: "வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்" - உயர் நீதிமன்றம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல... மேலும் பார்க்க

அஜித்குமார் காவல் மரணம்: திருப்புவனம் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு; சிக்கியது எப்படி?

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் காவல் மரண கொலை வழக்கில் 6 பேரைக் கைது செய்துள்ள நிலையில், மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமா... மேலும் பார்க்க