செய்திகள் :

"காங்கிரஸ் மேலிடம் சொல்வதை விட, திமுக சொல்வதை தான் டி.கே.சிவக்குமார் கேட்பார்" - நிர்மல் குமார்

post image

காவிரி விவகாரம் மீண்டும் தமிழ்நாடு, கர்நாடகா இடையே பிரச்னையாக முற்றி வருகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மீண்டும் முயற்சிகளைச் செய்து வருகிறது கர்நாடகா அரசு. இதற்கு தமிழ்நாடு கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இது சம்பந்தமாக பேச நாளை (ஆகஸ்ட் 3) கர்நாடகா செல்வதாக இருந்தது. விஜய்யை கர்நாடகாவிற்கு அழைத்திருக்கிறேன் என்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வேறு கூறியிருந்தார்.

காவிரி ஆறு
காவிரி ஆறு

ஆனால், நேற்று முன்தினம் (ஜூலை 31), இப்போதைக்கு விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று கூறிவிட்டார் டி.கே.சிவக்குமார்.

விஜய் கர்நாடகா செல்ல திட்டமிட்டிருந்ததற்கு திமுக, அதிமுக தொடங்கி விவசாய சங்கங்கள் வரை அனைத்து தரப்பும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தன.

நிர்மல் குமார் பேட்டி

இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "நேற்று மாலை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் "தமிழக முதல்வர் தனிமைப்பட்டு நிற்கிறார்" என்று ஒரு வார்த்தையைச் சேர்த்து இருக்கிறார்.

பல வாரங்களாகப் பல தரப்பினர் சொன்னது என்னவென்றால், கர்நாடகாவில் இருக்கும் டி.கே. சிவகுமார் அவர்களுக்கும் திமுக குடும்பத்திற்கும் இடையே கட்சியைத் தாண்டி பல நல்ல உறவுகள் இருக்கிறது.

பல வருடங்களாகவே இவர்களுக்குள் நல்ல பிணைப்பு உள்ளது. அதனால் திமுகவினர் என்ன சொல்வார்களோ அதைத்தான் கர்நாடகாவிலும் செய்வார்கள். டி.கே. சிவகுமார் அனைத்தையும் விட திமுக குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல வழிகளில் விரும்பினார்.

டி.கே.சிவக்குமார் - ஸ்டாலின்
டி.கே.சிவக்குமார் - ஸ்டாலின்

காங்கிரஸ் தலைமை சொல்வதைக் கேட்பதை விட டி.கே. சிவகுமார், திமுக குடும்பம் மற்றும் ஸ்டாலின் அவர்கள் சொல்வதைத்தான் அதிகமாகக் கேட்பார் என்று பல தரப்பினரும் சொல்லி வந்தார்கள்.

அதேபோல்தான் கடந்த ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளும் இருக்கின்றன. ஏனெனில், அவர் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ அதைத்தான் திமுக சொல்கிறது. திமுக சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார்.

"தமிழக முதல்வர் தனிமைப்பட்டு நிற்கிறார்" என்ற வார்த்தை, எந்த வகையிலும் தமிழக மக்களுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் தெரிவித்தது போல இருக்கிறது.

நேற்று காலை முதல்வர் பல தரப்பு ஆலோசனைகளை முடித்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தார். மதியமே நம்முடைய வழக்கறிஞர் உமாபதி அவர்களும் இதுகுறித்துப் பேசி, அனைத்து ஆலோசனைகளும் முடிந்து வழக்கு பதிவு செய்யும் திட்டத்தைச் சொன்னார்.

அந்த நடைமுறை போய்க்கொண்டிருக்கும்போதே, திமுக அவசரமாக மாலை 5 மணிக்கு மேல் தனியாக வழக்கை பதிவு செய்கிறது. இந்த மாதிரி ஒரே மாநிலத்தில் பல மனுக்களைத் தாக்கல் செய்தால் எவ்வளவு குழப்பம் ஏற்படும்?

அது எந்த அளவுக்கு அந்த மாநிலத்திற்கான உரிமைகளைப் பின்னோக்கித் தள்ளும்? கடந்த ஐந்து வருடங்களாக இவர்கள் என்ன செய்தார்கள்? திமுக தரப்பில் ஏதேனும் ஒரு மனுவையாவது தாக்கல் செய்திருக்கிறார்களா?"

நீட் போராட்டம், காவிரி: "அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!" - தயாநிதி மாறன் மறைமுக சாடல்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நீண்ட கால திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. அதன் பின், தவெக உடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். இதன் பிறகு, திமுகவும், காங்கிரஸ் மாறி ம... மேலும் பார்க்க

"காவிரி நம்மை பிரிப்பதற்குப் பதிலாக, ஒன்றிணைக்கட்டும்!" - விஜய்க்கு கர்நாடகா பாஜக சமாதான கடிதம்!

இந்தியாவில் எந்த மாநிலத்தில் காங்கிரஸும், பாஜகவும் ஒரு விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறதோ என்னவோ, கர்நாடகாவில் ஒரு விஷயத்தில் இருக்கும். அது தான் காவிரி குறுக்கே அணை கட்டுவது. கர்நாடகாவில் காங்க... மேலும் பார்க்க

'வாக்குச்சாவடி எண் 75; வாக்கு எண் 412' - கொளத்தூர் EVM மெஷினில் என்ன பிரச்னை ஏற்பட்டது?

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் கொளத்தூர் தொகுதியின் 14 பூத்களின் EVM மெஷின்களில் பதிவான வாக்குகளை சரிபார்க்கும் பணி ஐந்தாவது நாளாக நடந்து வருகிறது.EVM Verification "EVM இயந்திரங்கள் சரியாக பாதுகா... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தர் போராட்டம்: குழந்தைகளை மன்னித்த மோடி; குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் தீப்கே!

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னை குறித்தும், தன் தாயார் குறித்தும் அவதூறாக பேசியதாக நேற்று பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மோடியின் மன்னிப்பு அதில் அவர் முக்கியமாக பேசியிருந்ததாவது, "ஜந... மேலும் பார்க்க

"அடிப்படைப் புரிதல் இல்லாத கூட்டம் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது!"- வெளுத்து வாங்கும் வேல்முருகன்

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, கரப்பான் ஜனதா கட்சியினர் நாடுமுழுக்க நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் சென்னையில் அவர்களது கட்சித் தலைமை அலுவலகத்திலேயே தொடர் போர... மேலும் பார்க்க

"இஸ்ரேலும் கைகோக்கிறது: ஈரான் போருக்கு தயார்; ஆனாலும் நிறுத்துகிறோம்" - ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

போர்... போர் நிறுத்தம்... புரிந்துணர்வு ஒப்பந்தம்... போர் நிறுத்தம்... போர்... மூன்று நாள்களுக்கு போர் நிறுத்தம்... மீண்டும் போர் - இது தான் கடந்த 155 நாள்களாக ஈரான் - அமெரிக்கா போரில் நடந்து வரும் சம... மேலும் பார்க்க