செய்திகள் :

காட்பாடி: கறாராக `லஞ்சம்’ கேட்ட அரசு பெண் மருத்துவர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அக்கிரெட்டிபுதூர் கிராமம், வீரமந்திரி தெருவைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி ரவீனா. இவர்களின் 3 பிள்ளைகள், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பயில்கின்றனர். பள்ளி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், பிள்ளைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரம், உடல் தகுதி குறித்த மருத்துவச் சான்று பெறுவதற்காக, கடந்த 22-ம் தேதி பள்ளிக்குப்பத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றார் தாய் ரவீனா.

அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் வெங்கடலட்சுமி, `தகுதி சான்றிதழ் வழங்க ஒருவருக்கு ரூ.300 வீதம் 3 பிள்ளைகளுக்கும் சேர்த்து ரூ.900 தர வேண்டும்’ என லஞ்சம் கேட்டிருக்கிறார். ரவீனா, `தன்னிடம் பணம் இல்லை’ எனக் கூறியபோதும், `ஜிபே’ மூலம் பணம் அனுப்பு. இல்லைனா வேறு ஆளை பாருமா’ என்று அதிகார தொனியில் கறார் காட்டியிருக்கிறார் மருத்துவர் வெங்கடலட்சுமி.

பள்ளிக்குப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவீனா, மருத்துவர் பேசியதை தனது செல்போனில் ரகசியமாக ஆடியோ பதிவு செய்துகொண்டார். அந்த ஆதாரத்துடன் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ரசாயன பவுடர் தடவிய 900 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை ரவீனாவிடம் கொடுத்து அனுப்பினர்.

அந்த பணத்தை எடுத்து சென்று மருத்துவர் வெங்கடலட்சுமியிடம் கொடுத்தார் ரவீனா. மருத்துவர் வெங்கடலட்சுமி அந்த பணத்தை கைநீட்டி வாங்கியபோது, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் உள்ளே சென்று மருத்துவரைக் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து, வேலூர் சிறையில் மருத்துவர் வெங்கடலட்சுமி அடைக்கப்பட்டார்.

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க