செய்திகள் :

காதலனை கரம்பிடிக்க பாலில் விஷம் கலந்து தந்தையை கொன்ற மகள் - குடும்ப சண்டையில் காட்டிக்கொடுத்த கணவன்

post image

காதலனை கைபிடிக்க, சொந்த தந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தந்தையின் வேலையில் சேர்ந்த மகள் 3 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராப்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயந்த் பல்லவார். கான்ஸ்டபிளான இவர் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி அங்குள்ள கோர்ட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். அது ஒரு இயற்கையான மரணம் என்று கருதி பிரேத பரிசோதனை செய்யாமல் ஜெயந்த் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.

காட்டிக்கொடுத்த மாஜி கணவன்

ஜெயந்த் மரணத்திற்கு பிறகு அவரது மகள் ஆர்யா தனது காதலன் ஆசிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமாகி சிறிது நாட்களில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டனர். மற்றொருபுறம் ஜெயந்த் இறந்ததால் அவரது மகள் ஆர்யாவிற்கு போலீஸ் வேலை கிடைத்தது. தற்போது அவர் பயிற்சியில் இருக்கிறார்.

கணவன் மனைவி சண்டையால் ஆர்யா தனது கணவனை விட்டுவிட்டு தனது பெற்றோர் வீட்டில் வந்து வசித்து வருகிறார். இதனால் கோபம் அடைந்த ஆசிஷ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்த்தை அவரது மகள் விஷம் கொடுத்து கொலை செய்ததாக போலீஸில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து இவ்வழக்கை போலீஸார் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தனர். விசாரணையில் அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது.

பாலில் விஷம் கலந்து கொடுத்த மகள்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ஆர்யாவின் காதலுக்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து ஜெயந்த்தை கொலை செய்ய ஆர்யாவும், அவரது காதலனும் சேர்ந்து முடிவு செய்தனர். இதற்காக ஆர்யா தனது உறவினர் சைதன்யா என்பவரை தொடர்பு கொண்டு ரூ.5 ஆயிரம் கொடுத்து விஷம் வாங்கி வரச்சொன்னார். அந்த நபரும் விஷம் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார். 2023ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி ஜெயந்த் வேலைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தார். அந்த நேரம் ஆர்யா தனது தந்தைக்கு ஆசையாக மில்க்‌ஷேக் கொண்டு வந்து கொடுத்து குடிக்கும்படி சொன்னார்.

வேலைக்கு செல்லும் அவசரத்தில் ஜெயந்த் தனது மகள் கொடுத்த பாலை வாங்கி குடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் பாலில் ஆர்யா விஷம் கலந்து இருந்தார். ஜெயந்த் மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றபோதுதான் லேசான மயக்கம் வருவது போன்று உணர்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்து இறந்துவிட்டார். இக்கொலை தொடர்பாக ஆர்யா, ஆசிஷ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிஷ் போலீஸ் பயிற்சியில் இருந்தபோது நடத்தை சரியில்லாமல் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Vinay Kulkarni: பாஜக பிரமுகர் கொலை வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு... மேலும் பார்க்க

180 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை; டெலிகிராமில் பரவிய வீடியோ; குற்றவாளியின் வீடு இடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்கள் 180 பேரை காதலிப்பதாகப் பேசி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அயன் அகமத் (18) என்ற வாலிபர் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிரு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 180 மைனர் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து ஆன்லைன் வெளியிட்ட நபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்களைக் குறிவைத்து மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. அமராவதி அருகில் உள்ள பரத்வாடா என்ற இடத்தில் வசிக்கும் தன்வீர் என்பவர் மைனர் பெண்களைக் காதலி... மேலும் பார்க்க

பெண் காணாமல்போன வழக்கு; அலட்சியம் காட்டிய 28 போலீஸார் சஸ்பெண்ட்; கோர்ட் தலையிட்டு அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள பிண்டஜோரா இடத்தை சேர்ந்த புஷ்பா (18) என்ற இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரின் தாயார் ரேகா தேவி போலீஸில் புகார் செய்திருந்தார... மேலும் பார்க்க

கும்பமேளா வைரல் பெண்ணைத் திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு; கேரள சிபிஎம் நிர்வாகிகளிடம் விசாரணை?

பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்றுக்கொண்டிருந்த மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் பிரபலமானார். கும்... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை; நடந்தது என்ன?

சேலம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் ஆசிரிய... மேலும் பார்க்க