செய்திகள் :

காதலி விரித்த வலை; சுற்றிவளைத்த எதிரிகள்; பின்வாசலில் தப்பிய ரவுடி; ஹரியானாவில் சினிமா பாணி சம்பவம்

post image

ஹரியானா மாநிலம் ரோஹ்டக் என்ற இடத்தில் உள்ள மிலன் தாபா என்ற உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 கிரிமினல்கள் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் சன்னி என்ற ரவுடி உணவகத்தின் பின் வாசல் வழியாகத் தப்பிச்சென்றுவிட்டான். சன்னியைக் குறிவைத்துத்தான் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சன்னியும், ஒரு பெண்ணும் அந்த உணவகத்திற்கு இரவில் வந்தனர்.

சன்னி தனது கூட்டாளிகளைச் சந்திக்க வந்திருந்தான். அனைவரும் ஒரு டேபிளில் அமர்ந்திருந்தனர். அந்நேரம் அப்பெண் யாருக்கோ போன் செய்து பேசியதோடு சில மெசேஜ்களையும் அனுப்பினார். இதனைக் கவனித்த சன்னி ஏதோ தவறு நடக்கிறது என்று நினைத்து உடனே எழுந்து உணவகத்தின் பின்பக்கம் ஏதோ காரணத்தைச் சொல்லிவிட்டு சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் ஒரு கும்பல் வந்து அங்கு இருந்தவர்கள் மீது சரமாறியாக துப்பாக்கியால் சுட்டது.

இதில் சன்னியின் கூட்டாளிகள் 3 பேரும், உணவகத்திற்கு வந்த விருந்தினர் ஒருவர் என நான்கு பேர் உயிரிழந்தனர். ஆனால் சன்னி மயிரிழையில் உயிர் தப்பினான். இத்துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சன்னியின் நடமாட்டத்தை அவனுக்கு மிகவும் நெருக்கமான யாரோ சன்னியின் எதிரிக்குத் தெரிவித்துள்ளனர்.

அதனால் சன்னி உணவகத்தில் இருந்த போது சரியான நேரத்திற்கு வந்து எதிரி கும்பல் வந்து இத்துப்பாக்கிச்சூட்டை நடத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீஸார் நடத்திய விசாரணையில் சன்னியின் காதலி ஜான்வி சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அதோடு துப்பாக்கிச்சூடு நடந்த அடுத்த நாள் காலையில் அவர் இந்தியாவில் இருந்து தப்பித்து பேங்காக் சென்று இருப்பது தெரிய வந்தது. சன்னியின் காதலி ஜான்வி இத்துப்பாக்கிச்சூட்டிற்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளார். அவர்தான் சன்னியின் இருப்பிடம் குறித்து கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து எதிரி கும்பலான பாவ் ரிதோலியா கூட்டத்திற்குத் தகவலைத் தெரிவித்துக்கொண்டே இருந்துள்ளார்.

அதற்கு கைமாறாக்கத்தான் துப்பாக்கிச்சூடு நடந்த அடுத்த நாள் ஜான்வி வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்ல எதிரி கும்பல் உதவி செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இத்துப்பாக்கிச்சூட்டில் ஜான்விக்குத் தொடர்பு இருப்பது குறித்து தெரிந்தவுடன் போலீஸார் அவருக்கு எதிராகத் தேடுதல் நோட்டீஸ் கொடுத்து அனைத்து விமான நிலையங்களையும் உஷார் படுத்தினர். ஆனால் அதற்கு முன்பே ஜான்வி இந்தியாவை விட்டு சென்று இருந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய 5 பேரில் நான்கு பேரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. அவர்களைத் தேடி வருகின்றனர். ஜான்வி குடும்பமும் கிரிமினல் செயல்களோடு தொடர்புடையது ஆகும்.

அதன் மூலம்தான் ஜான்விக்கு சன்னியின் எதிரிகளின் நட்பு கிடைத்திருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஜான்வியின் தாயார் பப்லி தேவி உத்தரப்பிரதேசத்தில் பெண் தாதாவாக விளங்கினார்.

அவர் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், கடத்தல் போன்ற பல்வேறு காரியங்களில் ஈடுபட்டு வந்தார்.

ஜான்வியின் தந்தை கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் ஒன்றில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். ஜான்வி ஹரியானாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு பானிபட் என்ற இடத்தில் வசித்து வந்தார். பின்னர் கணவரை அவர் விவாகரத்து செய்துவிட்டார்.

மும்பை: 60 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; ரயில் நிலையக் கழிவறையில் கொடூரம்

மும்பை காட்கோபர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு 60 வயது பெண் ஒருவர் தனது 18 வயது மகளுடன் வந்தார். அவர் கடாவ்லி செல்வதற்காக புறநகர் ரயிலுக்காகக் காத்திருந்தார். அந்நேரம் கழிவறையின் நடைமேடையில் இரு... மேலும் பார்க்க

கார் இடித்ததை தட்டிக்கேட்ட ஆத்திரம்; குழந்தைகள் கண்முன்னே தந்தையை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகிகள்

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். கூலித் தொழிலாளியான இவருக்கு 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இருவர... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம்: காணிக்கை எண்ணும் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதா? - பக்தர்கள் புகார்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்று, குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில். இங... மேலும் பார்க்க

ஏற்காடு: ஸ்டிக்கர் பிரிக்காத புத்தாடை, புதருக்குள் சிறுமியின் சடலம், விலகாத மர்மம் - என்ன நடக்கிறது?

சேலம் மாவட்டம் ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதை அமைந்துள்ள வழுக்குப்பாறை பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறுமி ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. நிகழ்விடத்திற்குச் சென்று ஆ... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் பழகிய சிறுவன் மூலம் கர்ப்பம்; நர்சிங் மாணவி மீது போக்சோ வழக்கு பதிவு!

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் 4-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பெயின்ட்டராக வேலை பார்த்து வருகிறான். சிறுவன் கடந்த ஆண்டு நாகர்க... மேலும் பார்க்க

சென்னை: பெண்கள் பாத்ரூமில் கேமரா - மேனேஜர் சிக்கியது எப்படி?!

சென்னை, பொழிச்சலூரைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், வானகரம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 25.11.2026-ம் தேதி அந்தப் பெண்ணும் அவருடன் வேலைப்பார்க்கும் இன்னொரும் பெண்ணும் பாத்ர... மேலும் பார்க்க