செய்திகள் :

'காமேனியின் இறுதிச் சடங்கிலேயே ஈரான் தலைவர்களை ஒழித்துவிட முடியும்'- ட்ரம்ப் பேச்சு; ஈரான் பதிலடி!

post image

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி உயிரிழந்தார் ஈரானின் உச்சத் தலைவர் காமேனி.

இவரது இறுதிச்சடங்கு ஈரானில் நேற்று (ஜூலை 4, 2026) முதல் ஜூலை 9-ம் தேதி வரை ஈரானில் நடைபெற்று வருகிறது.

இந்த இறுதிச்சடங்கில் திரளான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலியும், மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.

இறுதிச் சடங்கு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் Axios செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள போன்கால் பேட்டியில், "அவர்கள் (ஈரானின் முக்கிய தலைவர்கள்) அனைவரும் அங்கேதான் இருக்கிறார்கள்.

காமேனியின் இறுதிச் சடங்கு
காமேனியின் இறுதிச் சடங்கு

ஒரே ஒரு தாக்குதலில் நாம் அவர்கள் அனைவரையும் ஒழித்துவிட முடியும்.

ஆனால், நாம் அதைச் செய்யப் போவதில்லை. ஏனெனில், அதற்குப் பிறகு நாம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கே எவருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இப்போது ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வதற்காகக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.

ட்ரம்பின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில், "மனிதர்களைக் கொன்றுவிட முடியும். ஆனால் அவர்களின் கொள்கைகளை ஒருபோதும் கொல்ல முடியாது.

நீங்கள் அயதுல்லா காமேனியைத் தான் கொன்றீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு வாசனைத் திரவியக் குப்பியைத்தான் உடைத்திருக்கிறீர்கள். அதன் நறுமணம் இப்போது எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.

உங்களுக்கு நாகரிகமும் இல்லை, வரலாறும் இல்லை, மானமும் இல்லை... அதனால்தான் உங்களால் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை." என்று பதிவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க