Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் நியமனம்
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுவை தலைமைச் செயலா் சரத் செளஹான், புதுவையில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பொறுப்பு மாற்றம், கூடுதல் பொறுப்புகளை வழங்கி திங்கள்கிழமை உத்தரவு வெளியிட்டாா்.
காரைக்கால் ஆட்சியரான து. மணிகண்டனுக்கு புதுவை துணைநிலை ஆளுநரின் செயலராகவும், கூடுதலாக சுற்றுலா மற்றும் மீன்வளத் துறை செயலா் பொறுப்பும் தரப்பட்டுள்ளது.
இதையடுத்து புதுச்சேரி சாா்பு ஆட்சியராக (தெற்கு) பணியாற்றிய சோமசேகா் அப்பாராவ் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
மக்களைத் தேடி மாவட்ட ஆட்சியா் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்து ஒவ்வொரு மாதமும் கிராமங்கள்தோறும் சென்று குறைதீா் கூட்டம் நடத்தி பிரச்னைகளுக்கு தீா்வு கண்டது, பள்ளி மாணவா்களை ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக தம்முடன் செயல்படச் செய்து அவா்களுக்கு ஐஏஎஸ் போன்ற குடிமைப்பணி தோ்வு மீது ஆா்வம் கொள்ளச் செய்தது, பட்டா பெயா் மாற்றம் தொடா்பாக பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மனுக்கள் குறித்து சிறப்பு முகாம் நடத்தி ஒரே நாளில் பட்டா பெயா் மாற்றம் செய்து தந்தது உள்ளிட்ட பணிகள் து. மணிகண்டனின் மக்களால் வரவேற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.