செய்திகள் :

`காவல்துறையின் அன்றாட சில்லறை செலவின நிதி உயர்த்தி அறிவிப்பு!' - தமிழ்நாடு அரசு

post image

லஞ்சமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், ``மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, இலஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. தமிழ்நாடு அரசு, சட்டம் மற்றும் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை அமைத்து, பொது அமைதியை நிலைநிறுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்நோக்கத்தினை, தமிழ்நாடு காவல்துறை திறம்பட நிறைவேற்றுவதுடன், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குதல், இணையவழிக் குற்றங்களை எதிர்கொள்ளுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல் ஆகியவற்றை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகிறது. காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகள் அதிகரித்துவரும் சூழலில், அதற்கான செலவினமும் கணிசமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்திற்கொண்டு, மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர்கொள்வதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.

இவ்வாறு எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி வழங்குவதன் மூலம், காவல் நிலையங்களுக்கான நிர்வாக மற்றும் செயலாக்கச் செலவினங்களை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் களைவதுடன், இச்செலவினங்களுக்காக அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களைச் சார்ந்திருப்பது குறைவதோடு, ஊழலைத் தடுக்கவும், ஒழிக்கவும் வழிவகைசெய்யும். இந்நிலையில், இலஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டுமென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய நோக்கத்தின் அடிப்படையில், காவல்துறையில் நிர்வாகம் மற்றும் செயலாக்கத்திற்கு அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர்கொள்வதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி வழங்கப்படும் என்று 2026-27ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிகையின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

காவல்துறை
காவல்துறை

இந்நிலையில், மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அந்தந்த காவல் நிலையத்தின் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், காவல் நிலையங்களின் அன்றாட செலவினங்களுக்காக ஏற்கெனவே மாதந்தோறும் வழங்கப்பட்டுவரும் எதிர்பாராச் செலவு நிதி, முறையே, 3,750 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், 6,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும், 8,250 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதற்கென, ஆண்டுதோறும் ஆகும் செலவினத்திற்கு 71 கோடியே 1 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

வரி சீர்திருத்தங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கட்டும்!

ஒரு தேசத்தின் தொழில் வளர்ச்சியைத் தீர்மானிப்பது விற்பனை மட்டுமல்ல; ஆரோக்கியமான பணப்புழக்கமும், அதைத் தடையின்றி வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் சுதந்திரமும்தான். குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொ... மேலும் பார்க்க

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: ``அரசின் நிலைப்பாடு தவறான முன்னுதாரணம்" - பூவுலகின் நண்பர்கள் விமர்சனம்

தமிழ்நாட்டின் முக்கிய ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களில் ஒன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்த சதுப்பு நிலங்கள் பாதிக்கும் வகையில் தவெக அரசு முடிவெடுத்திருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ... மேலும் பார்க்க

ECI: ஜனநாயகத்தின் மீதான மரண அடி! - ஞானேஷ் குமார் விவகாரமும், சீரழியும் தேர்தல் அமைப்பும்!

டெல்லி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான குரல்கள் இந்தியா முழுவதும் ஒலிக்கின்றன. ஜனநாயகத்தின் குரல்களுக்கு காது கொடுக்க வேண்டிய ஆளும் அரசு, காவலர்களின் கைய... மேலும் பார்க்க

'உதயநிதி களமிறக்கிய 750 பேர்.!' - இடைத்தேர்தலில் திமுக புது பார்முலா!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்ததோடு கூட்டணி இல்லாமலும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பெருவாரியான வாக்குகளை பெற்றிருக்கிறது தி.மு.க. இடைத்தேர்தல் களத்தில் அக்கட்சி பயன்படுத்தி... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "நான் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டேன்" - துருவ் ராட்டி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனச் சி.ஜே.பி-யினர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் சி.... மேலும் பார்க்க

`சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலை: இப்போது தேவைதானா?' - உயர் கல்வித்துறையின் சிக்கல்கள்| ஓர் அலசல்

University of Western Australiaதமிழ்நாட்டில் முதல் வெளிநாட்டு பல்கலைக் கழகமாக மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்துக்கு, UGC ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆஸ்திரேலியாவின், 'குரூப் ஆப் எய்... மேலும் பார்க்க