செய்திகள் :

காவல் நிலைய வளாகத்திற்குள் போலீஸ் பைக்குகளுக்கு தீவைப்பு; அறந்தாங்கியில் பரபரப்பு!

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பேராவூரணி சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்து, நள்ளிரவில் 3 பைக்குகளுக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த காவல் நிலையங்கள்

அறந்தாங்கி பேராவூரணி சாலையில் டி.எஸ்.பி. அலுவலகம், சட்ட ஒழுங்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் என அனைத்தும் அடுத்தடுத்து இயங்கி வருகின்றன.

இதில் சட்ட ஒழுங்கு காவல் நிலையமும், போக்குவரத்து காவல் நிலையமும் ஒரே வளாகத்தில், வெறும் 5 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன. இரு காவல் நிலையங்களுக்கும் ஒரே நுழைவு வாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

3 பைக்குகள் சாம்பல்

நேற்று இரவு பணி முடிந்ததும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தங்கராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோரின் அரசு பைக்குகள் மற்றும் காவலர் குமாரராஜாவின் சொந்த பைக் ஆகிய 3 வாகனங்களும் வழக்கம்போல் காவல் நிலைய வாசலில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4.40 மணி அளவில் வாசலில் நின்ற 3 பைக்குகளும் திடீரென தீப்பற்றி எரிந்தன. அருகில் உள்ள மகளிர் காவல் நிலையப் பணியாளர்கள் ஓடிவந்து தீயை அணைக்கப் போராடினர். முடியாததால், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தபோதிலும், 3 பைக்குகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

சுற்றுச்சுவர் ஏறி தப்பியோட்டம்

சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி டி.எஸ்.பி. சார்லஸ் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். போக்குவரத்து காவல் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமரா இல்லாததால், சட்ட ஒழுங்கு காவல் நிலைய கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில், அதிகாலை நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், இரு காவல் நிலைய வாசல்களுக்கும் இடையே சந்தேகத்திற்கிடமாக உலாவுவதும், பைக்குகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு பின்பக்க சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பியோடுவதும் பதிவாகியிருந்தது.

மக்கள் பீதி

கேமராவில் மர்ம நபரின் முக அடையாளம் தெளிவாகப் பதியாததால், நகரின் முக்கிய இடங்களில் உள்ள பிற சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே நகரில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வரும் சூழலில், பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டிய காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து போலீசாரின் வாகனங்களுக்கே தீ வைக்கப்பட்ட சம்பவம் அறந்தாங்கி நகர மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

`கணிதம் கடினமல்ல' கற்றலில் விளையாட்டை புகுத்திய இளைஞர்; வெறுப்பை உதறி கணிதத்தை விரும்பும் குழந்தைகள்

“கணிதம் கஷ்டம்… எனக்கு கணிதமே வராது!” — பள்ளி வகுப்பறைகளில் பல குழந்தைகளிடம் இருந்து கேட்கப்படும் வார்த்தைகள் இவை. ஆனால், கணிதத்தைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; அதை கற்றுக்கொடுக்கும் முறையில்தான் மாற... மேலும் பார்க்க

தரையில் காலெடுத்து வைத்தால் எரியும் உடல்; குளத்திலேயே வசித்துவந்த சிறுவன் - மீட்ட ஆனந்த் அம்பானி!

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் அருகில் உள்ள பெல்தங்கா என்ற இடத்தைச் சேர்ந்த இக்பால் ஷேக் என்ற 16 வயது சிறுவன், கடந்த பல ஆண்டுகளாக தரையில் வாழும் நாட்களை விட அதிகமான நாட்களைக் குளத்து நீரில் கழித்து... மேலும் பார்க்க

1.5 டன் எடை, ரூ.5 லட்சம் விலை - அந்தியூர் கோயில் திருவிழாவில் கவனத்தை ஈர்த்த ஜாஃப்ராபாடி எருமை!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது சிறப்பு வாய்ந்த குருநாத் சுவாமி திருக்கோயில். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தேர் திருவி... மேலும் பார்க்க

சாதாரணமாக தொடங்கிய ஒரு நாள் வேலை… முடிவில் கிடைத்தது ₹98 கோடி புதையல் - நடந்தது என்ன?

பெல்ஜியத்தில் பழைய கட்டடம் ஒன்றின் அருகே கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்காக நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த 18 வயது இளைஞருக்கு, சுமார் ₹98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற... மேலும் பார்க்க

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவத... மேலும் பார்க்க