செய்திகள் :

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை... இந்தியா - ஜப்பான் மோதும் டி-20!

post image

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்தியா - ஜப்பான் அணிகள் சர்வதேச டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன.

வரும் செப்டம்பர் 22-ம் தேதி, ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஒற்றை டி20 போட்டி நடைபெறவிருக்கிறது.

இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவைக் கொண்டாடும் வகையில், ‘ஸ்போர்ட் 75’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அக்டோபரில் நாகோயாவில் தொடங்கவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பாக, இரு அணிகளுக்கும் இது முக்கியமான பயிற்சிப் போட்டியாகவும் அமையவிருக்கிறது.

இந்தியா - ஜப்பான் மோதும் டி-20!
இந்தியா - ஜப்பான் மோதும் டி-20!

ஜப்பானில்... இந்திய நேரப்படி எப்போது?

இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. ஜப்பான் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும்.

மைதானத்துக்குச் செல்ல முடியாத இந்திய ரசிகர்கள், ‘FanCode’ ஆப் மற்றும் இணையதளம் வழியாக போட்டியை நேரலையில் பார்க்கலாம்.

இந்தப் போட்டி நடைபெறும் மைதானத்தில் சுமார் 2,000 இருக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், இந்திய அணி விளையாடுகிறது என்ற செய்தி வெளியானதும், டிக்கெட் விற்பனைக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியா - ஜப்பான் மோதும் டி-20!
இந்தியா - ஜப்பான் மோதும் டி-20!

ஜப்பானை எதிர்கொள்ளப் போகும் இந்திய அணியில் பி.சி.சி.ஐ சீனியர் வீரர்கள் யாரையும் ஜப்பானுக்கு அனுப்பவில்லை. மாறாக, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியே ஜப்பானுக்கு எதிரான இந்தப் போட்டியிலும் களமிறங்கவுள்ளது. அதனால், இந்தியாவின் இளம் வீரர்களுக்கு இது ஜப்பான் மண்ணில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பாகவும் அமையவிருக்கிறது.

ஷஃபாலி வேகம்; தீப்தி கொடுத்த திருப்பம்! வங்கதேசத்தை வீழ்த்தி மீண்டும் பைனலில் இந்தியா மகளிர் அணி

ஒருபக்கம் ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு… இன்னொரு பக்கம் வலுவான இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் ஆசியக் கோப்பையின் முதல் அரை... மேலும் பார்க்க

“என்னிடம் ஏதோ ஒன்றை அவர் பார்த்திருக்க வேண்டும்.!” – விராட் கோலி ஆதரவு குறித்து ரஜத் படிதார்!

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், நட்சத்திர வீரர்கள் என பல சிறப்புகள் இருந்தாலும், பல ஆண்டுகளாக அந்த அணியைச் சுற்றியிருந்த ஒரே குறை ஐபிஎல் கோப்பைத... மேலும் பார்க்க

Cricket TV: ஒரே தளத்தில் Live Match, Highlights, Docu; ஆஸ்திரேய கிரிக்கெட் வாரியத்தின் புது முயற்சி!

ஆஸ்திரேலியக் கிரிக்கெட் போட்டிகளை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் நோக்கில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) புதிய டிஜிட்டல் ஸ்ட்ரீ... மேலும் பார்க்க

`பெண் பிள்ளையை ஏன் கிரிக்கெட்டுக்கு அனுப்புறீங்க?'- உலக சாதனை படைத்த தீப்தி சர்மாவின் நெகிழ்ச்சி கதை

2026 மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிராக 0 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார் தீப்தி சர்மா. இதன்மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

`எல்லாம் நல்லாத்தானே போச்சு... ஏமாற்றம்!' – கேப்டன் பதவி பறிப்பு குறித்து சூர்யகுமார் யாதவ் வேனனை

இந்திய டி20 அணியின் கேப்டனாக தொடர்ந்து பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற சில மாதங்களிலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பே... மேலும் பார்க்க

TNPL 2026 Final: 'இறுதிப்போட்டியில் இப்படி ஓர் ஆதிக்கமா?' - மதுரையை வீழ்த்தி சாம்பியனான கோவை!

இறுதிப்போட்டி என்றாலே பரபரப்பு இருக்கும் அதுவும் கோப்பையை முடிவு செய்யும் ஆட்டம் என்றால், கடைசி பந்து வரை யார் பக்கம் ஆட்டம் திரும்பும் என்று கணிக்க முடியாது. ஆனால் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த TNPL 2... மேலும் பார்க்க