Vijay: ``இதைத் தாண்டி தவெக-வால் செல்ல முடியாது என்பது நிரூபணமாகிறது" - தமிமுன் அ...
`கிலோ 5 ரூபாய்க்கு விற்கும் மாம்பழம்' குப்பையில் கொட்டும் விவசாயிகள் - திண்டுக்கல்லில் தொடரும் சோகம்
தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் மாம்பழங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம் பசந்த் உள்ளிட்ட உயர் ரக மாம்பழங்களும், கிரேப் செந்தூரம், மல்கோவா போன்ற நாட்டு ரகங்களும் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்று வட்டார பகுதிகளான நத்தம், சாணார்பட்டி கோபால்பட்டி, பரலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாம்பழங்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவு மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழங்களை வெளி மாநிலங்களில் குறைந்த அளவே கொள்முதல் செய்து வருகின்றனர்.
மேலும் போர் பதற்றம் காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்கள் குறைந்துள்ளது. இதனால் மாம்பழங்களின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஒரு கிலோ மாம்பழம் 10 ரூபாய் முதல் 20 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் ஒரு கிலோ மாம்பழமே ஐந்து ரூபாய்க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் கடும் பாதிப்புக்குள்ளாகிய விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த மாம்பழங்களை டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு குப்பைகளில் கொட்டி வருகின்றனர். இந்த நிலைமையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் மாம்பழங்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



















