செய்திகள் :

குஜராத்: ரூ. 284 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் - பிரதமர் தொடக்கி வைத்தார்!

post image

ஏக்தா நகர்(குஜராத்): குஜராத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 30) நாட்டினார்.

இந்திய ஒருங்கிணைப்புக்காக பாடுபட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் மறைந்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் நிகழாண்டு தீபாவளித் திருநாளான வியாழக்கிழமை(அக்.31) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குஜராத் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, நர்மதா மாவட்டத்தில் ஏக்தா நகர் பகுதியில், சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான ’ஒற்றுமை சிலையை’ இன்று பார்வையிட்டார்.

அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்கள் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்தார். ரூ. 75 கோடியில் அமைக்கப்பட்ட உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.

வங்கிக் கடன்! ரூ. 9,000 -க்கு பெற்ற மகனை விற்ற அன்னை!

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பிகார் பெண் ஒருவர், பெற்ற மகனையே விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகார் அராரியா மாவட்டத்தில் ராணிகஞ்ச் தொகுதியின் பச்சிரா கிராமத்தில் வசித்துவர... மேலும் பார்க்க

கேரளம்: ரயில் மோதி 4 தமிழக துப்புரவு தொழிலாளர்கள் பலி!

கேரளத்தில் பணியிலிருந்த 4 துப்புரவு தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் 4 பேரும் பலியாகினர்.கேரளத்தின் பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஷோரனூர் பாலம் அருகே சனிக்கிழமையில் (நவ.... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் தில்லி? காற்றின் தரம் கவலைக்கிடம்!

தீபாவளி பண்டிகை கொண்டாடத்தைத் தொடர்ந்து, தில்லியில் காற்றின் தரம் மிகக் கடுமையான அளவில் மோசமடைந்துள்ளது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமையில் (நவ. 3) காற்றின் தரக் குறியீடு 400ஐ தாண்டியதால், ஆபத்தான நிலையில... மேலும் பார்க்க

வயநாட்டில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல் இன்று பிரசாரம்!

வயநாடு மக்களவை இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வயநாட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார். வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வருகிற ... மேலும் பார்க்க

யானைகள் தாக்கி இருவர் பலி! ஒருவர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் பந்தவ்கர் புலிகள் காப்பகத்திற்கு அருகே காட்டு யானைகளால் 2 பேர் கொல்லப்பட்டனர். மத்தியப் பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் உள்ள பந்தவ்கர் புலிகள் காப்பகத்திற்கு 10 கி.மீ. தொலைவில் ... மேலும் பார்க்க

ஆஸ்துமா, காசநோய் உள்ளிட்ட 8 நோய்களுக்கான மருந்து விலை உயா்வு: பிரதமருக்கு தமிழக எம்பி கடிதம்

ஆஸ்துமா, காசநோய், கண் அழுத்த நோய் உள்ளிட்ட 8 விதமான நோய்களுக்கான மருந்துகளின் விலைகளின் உச்சவரம்பில் 50 சதவீதம் உயா்த்தப்பட்டிருப்பது குறித்த காரணத்தை கேட்டு விருதுநகா் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற... மேலும் பார்க்க