செய்திகள் :

குரோர்பதி படப்பிடிப்பில் அமிதாப்பச்சன் கீழே விழுந்து காயம் - `ஓய்வு' குறித்து நச் கமென்ட்!

post image

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் தான் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்த அமிதாப்பச்சன் அதிலிருந்து மீண்டார். அதனால் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். தற்போது கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின் போது கீழே விழுந்து காயம் அடைந்தார்.

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது காயம் அடைந்தது குறித்து கோபனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சி தொடங்கும்போது வழக்கமாக மேடையின் மையத்தில் நின்றுகொண்டு தனது சிறப்பம்சமான தொடக்க உரையை நிகழ்த்தும் அமிதாப்பச்சன் இம்முறை தனது இருக்கையில் அமர்ந்திருந்தவாறே காணப்பட்டார். படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததாகவும், அதனால் எழுந்து நிற்பதில் சற்று சிரமம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

"வழக்கமாக, நான் மேடையின் மைய பகுதியில் நின்று பேசுவேன். ஆனால் இன்று, எனக்கு முழங்காலில் காயம் உள்ளது. படப்பிடிப்பின் போது, ​​நான் வழுக்கி விழுந்து என் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

எனவே எழுந்து நிற்பதில் சிறிது சிரமம் இருப்பதால், உட்கார்ந்து கொண்டே தொடக்க உரையை வழங்குகிறேன்'' என்று அமிதாப்பச்சன் தெரிவித்தார். இருப்பினும், காயம் பெரிதாக இல்லை என்றும், விரைவில் சரியாகிவிடும் என்றும் ரசிகர்களுக்கு உறுதியளித்தார். அமிதாப் பச்சன் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருவதில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்தி வந்து கொண்டிருக்கும் நிலையில் அது குறித்த வதந்திகளை அமிதாப்பச்சன் மறுத்துள்ளார்.

தனது சமூக வலைப்பதிவு ஒன்றில் `ஓய்வு பெற விரும்புகிறேன்' என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். அதனை தொடர்ந்தே இந்த வதந்தி வெளியானது. கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறாரா அல்லது திரைப்படங்களிலிருந்து விலகுகிறாரா என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, தான் உறங்கச் செல்வது குறித்தே அப்படிப் பதிவிட்டதாக நகைச்சுவையுடன் அவர் குறிப்பிட்டார். மேலும், திரைப்படத் துறையிலிருந்து தான் விலகவில்லை என்றும் ரசிகர்களுக்கு உறுதியளித்தார்.

"அதிஷ்ட தேவதை ஒருநாள் வாழவைப்பாள் என நம்பினேன்; ஆனால்..."- 5 மூட்டை லாட்டரி வாங்கி ஏழையான ராகவன்!

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை மாற்றிவிடலாம் என்ற ஒற்றை ஆசையினால், கடின உழைப்பால் ஈட்டிய வருமானம், பூர்வீக நிலம் மற்றும் நகைகள் என சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகையை லாட்டரி சீட்டுகளுக்காகவே... மேலும் பார்க்க

பெங்களூரு: ஆட்டோ கட்டணம் செலுத்துவதில் தகராறு; டிரைவருடன் மல்லுக்கட்டிய இளம்பெண்கள்; வீடியோ வைரல்

பெங்களூருவில் இரண்டு இளம்பெண்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கியவுடன் ஆட்டோவில் பயணம் செய்ததற்கு பணம் கொடுப்பது தொடர்பாக ஆட்டோ டிரைவருக்கும், அப்பெண்களுக்கும் இடையே ... மேலும் பார்க்க

முதலைகள் நிறைந்த ஆற்றில் 25 கி.மீ நீச்சல் - 75 வயது பாட்டியின் உயிர் தப்பிப்பதற்கானப் போராட்டம்!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயதான கேஷி தலாய்.தன் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், சனிக்கிழமை இரவு வழக்கம்போல குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் அருகி... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்திற்கு மசூதி இடிப்பு: லத்தி சார்ஜ், கண்ணீர் புகைக்குண்டால் கூட்டத்தை கலைத்த போலீஸார்

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில் கல் வீசப்பட்டது. அங்குள்ள் கந்தல் சதுக்கத்தில் இருந்து கோபால் மந்திர்... மேலும் பார்க்க

`குண்டர்களுடன் வந்து கமிஷன் கேட்டார்' - மோசமான சாலையை வீடியோ எடுத்தவரை அடித்த டெல்லி அமைச்சர்

டெல்லியில் நேற்று திலக் நகர் பகுதியில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா அங்குள்ள திலக் நகர் பகுதியில் பழுதடைந்த சாலையை பார்வையிட வந்தார். அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மிகவும் மோச... மேலும் பார்க்க

மதுபானக்கடைக்குள் நுழைந்து அரை பாட்டில் மதுவை குடித்து போதையில் உறங்கிய குரங்கு - திகைத்த மக்கள்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் நுழைந்த ஒரு குரங்கு, அங்கிருந்த வோட்கா பாட்டிலை திறந்து அரை பாட்டில் மதுவைச் சாவகாசமாக குடித்துவிட்டு, அங்கேயே மயங்கி விழுந்து தூங்கிவிட்டது.... மேலும் பார்க்க