ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்...
குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை
தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தவெக தலைவருக்காக மலேசியாவில் கூடிய கூட்டத்தை பார்க்கிறபோது உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இருந்தது.

மலேசியாவில் இதற்கு முன்பு பிரதமர், குடியரசுத் தலைவர் மட்டும்தான் ரோட் ஷோ நடத்தியுள்ளனர். இந்த முறை விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர் தமிழகத்தின் வரலாற்று நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை வேண்டும் என்ற முறையில் பெண்கள் இளைஞர்கள் என்று 18 – 35 வயதிற்குட்பட்டோர் ஒரு மனதாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. 1972-ம் ஆண்டு புரட்சித் தலைவருக்கு உருவான கூட்டம் போல,
1988-ம் ஆண்டு அம்மா ஜெயலலிதா பார்த்ததை போல ஒரு மாற்றம் உருவாகியுள்ளது. மக்கள் சக்தியோடு இணைந்து அவர் தமிழகத்தின் முதலமைச்சராக அமர்வார். ஒரு புதிய இயக்கம் தொடங்கியிருக்கிறது.
கூட்டணியில் எப்போது மற்றவர்கள் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஜனவரி முதல் வாரத்திற்குள் அனைத்தும் தெரியும்” என்றார். அப்போது, ஆர்எஸ்எஸ் பெற்று எடுத்த குழந்தை என்று தவெகவை திருமாவளவன் விமர்சித்தது குறித்த கேள்விக்கு,

“இலங்கை தமிழருக்கு குரல் கொடுத்த சீமான், அங்கு விருந்து சாப்பிட்டுவிட்டு பரிசு வாங்கி வந்த காலமும் இருக்கிறது.” என்றார். திருமாவளவன் குறித்த கேள்விக்கு, செங்கோட்டையன் தவறுதலாக சீமானை விமர்சித்தது பேசு பொருளாகியுள்ளது.














