செய்திகள் :

குளவி கொட்டியதில் 5 வயது சிறுமி பலி; திருச்சியில் சோகம்

post image

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நெய்குப்பையைச் சேர்ந்தவர் பூபதி. இவர், விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் அன்சிகா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று அன்சிகா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, ஒரு குளவி அன்சிகாவைக் கொட்டியது. இதனால், வலியால் அலறி துடித்த அவளை குடும்பத்தினர் மீட்டு புதூர் உத்தமனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

trichy

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். இந்தநிலையில், அன்சிகா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த, புகாரின் பேரில் சமயபுரம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளவி கொட்டியதால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி: நகைக்கடையில் ரூ. 12 லட்சம் மோசடி; இளைஞரைத் தேடும் போலீஸ்; பின்னணி என்ன?

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது போஸ் (வயது: 37). இவர், திருச்சி- கரூர் பைபாஸ் ரோட்டில் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் கிளை மேலாளராக வேலை செய்து வருகிறார். இத... மேலும் பார்க்க

திருமணம் கடந்த உறவு; கண்டித்த மூதாட்டியைக் கொன்ற ஜோடி சிக்கியது எப்படி? கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

80 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், திருமணம் கடந்த உறவில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கைதுகிருஷ்ணகிரி அருகேயுள்ள மேல் அம்மனேரி கிரா... மேலும் பார்க்க

மதுரை: வீட்டில் உறங்கி கொண்டிருந்தவரை வெட்டி படுகொலை செய்த கும்பல்; சொத்து தகராறு காரணமா?

மதுரை மாவட்டம் பரவை வேலவெளிவீதி 4 வது குறுக்குதெரு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சந்தோஷ் வயது 24 டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்இவருக்கு தாரணி என்ற மனைவியும் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர்.சந்தோஷ் ... மேலும் பார்க்க

`ஓடும் ரயிலில் ரூ.208 கோடி மதிப்பிலான பொருள்கள் கொள்ளை' - வீடியோ எடுத்து பகிந்துகொண்ட கொள்ளையர்கள்!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஓடும் சரக்கு ரயில்களைத் திட்டமிட்டு மறித்து, சுமார் 22.5 மில்லியன் டாலர் (ரூ.208 கோடி) மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்ததாக 14 பேர் மீது அமெரிக்க நீதித்த... மேலும் பார்க்க

அடுத்தடுத்து 2 திருமணங்கள்; நகை, பணம் மோசடி; தலைமறைவான இளம்பெண் - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ்நகரைச் சேர்ந்தவர் கார்த்திகா. இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், உப்புண்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவருக்கும் கடந்த 13.09.2026 அன்று தஞ்சாவூர்... மேலும் பார்க்க

ஈரோடு: பள்ளி மாணவிகள் 4 பேருக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் கைதான சமூக அறிவியல் ஆசிரியர்!

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் 45 வயதான விஜயசாரதி. ஈரோட்டில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் சமூக அறிவியல் ஆசிரியராயாக பணியாற்றி வந்திருக்கிறார். பள்ளியில் பயிலும் 13 வயது மாணவிகள் நால... மேலும் பார்க்க