செய்திகள் :

"குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறார்" – விஜய் மீது காவல் ஆணையாளரிடம் பரபரப்பு புகார்

post image

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த வி.சி.க. தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் என்பவர், கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், “கடந்த 21ம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பரப்புரைக் கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் ‘குழந்தைகள் சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம்பிடித்து தனக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

அரசியல் முதிர்ச்சியற்ற இத்தகைய தூண்டுதல், பிஞ்சு குழந்தைகளின் மனநிலையை தேர்தல் ஆதாயத்திற்காகத் தவறாகப் பயன்படுத்துவதாகும்.

இதனால் எனது 5 வயது மகன் விஜய்க்கு வாக்களிக்குமாறு என்னிடம் அடம்பிடித்தான். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தபோது, மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதும், உணவைத் தவிர்த்தும் த.வெ.க-விற்கு ஓட்டு போடுமாறு பிடிவாதம் பிடித்தான். இதனால் அக்கட்சிக்குத்தான் ஓட்டு போட்டதாகப் பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், எனக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது.

‘விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்’ என எனது மகன் தொடர்ந்து அழுது வருகிறான். இதேபோல பல குழந்தைகள் உளவியல் சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.

விஜய் மீது புகார்
விஜய் மீது புகார்

தேர்தல் விதிமுறைகளை மீறி பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த விஜய்யின் செயலால், பல குழந்தைகள் உளவியல் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர் பேசிய வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றத்தை நாடுவேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி! – காரணம் என்ன?

முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரையின் போது கோவை மற்றும் கரூர் என மாறி மாறி சென்று தேர்தல்... மேலும் பார்க்க

நெல்லை: வாக்களிக்க வந்த முதல் தலைமுறை வாக்காளர்கள், புதுமண தம்பதிகள்! | Photo Album

நெல்லை: ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், புதுமண தம்பதிகள்!நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு' - தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்! மேலும் பார்க்க

'ஜனநாயகத்தின் புதிய குரல்' வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள்!

முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வாக்காளர்முதல் தலைமுறை வா... மேலும் பார்க்க

’நேற்று அதிகாரிகளை கண்டித்து போராட்டம், இன்று பாராட்டு’ – ஒரே நாளில் மாறிய அம்மன் அர்ச்சுணன்!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், ராம் நகர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிய... மேலும் பார்க்க

’மஞ்சள் துண்டு போடுவதில் என்ன பிரச்சனை?’ – அதிகாரிகளிடம் கடுகடுத்த செந்தில் பாலாஜி!

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த தி.மு.க பூத் ஏஜெண்டுகள் மஞ்சள் நிற துண்டு அணிந்து வந்தனர். சில இடங்களில் மஞ்சள் துண்டு அணிய அனுமதிக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் மஞ்சள... மேலும் பார்க்க

"சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு" – வானதி சீனிவாசன் காட்டம்

கோவை சிவானந்த காலனி பகுதியில் உள்ள காமராஜர் பள்ளியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதி... மேலும் பார்க்க