செய்திகள் :

குவைத், பஹ்ரைனைத் தாக்கிய ஈரான்; தடுத்து நிறுத்திய ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதா?

post image

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் போரில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் 'தற்காலிக போர் நிறுத்தம்' இருந்து வந்தது.

ஆனால், நேற்று குவைத், பஹ்ரைன் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.

இந்தத் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் தலைமையகத்தையும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனி விமானத் தளத்தையும் தாக்கியதாகவும் ஈரான் கூறியது.

ஈரானின் இந்தப் பேச்சை மறுத்து அமெரிக்க தற்காப்புப் படைகளில் ஒன்றான அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது...
ஈரான் போர்
ஈரான் போர்

"மத்தியக் கிழக்கு நாடுகள் முழுவதும் ஜூன் 2 அன்று ஈரான் நடத்த முயன்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் ஈரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வெற்றிகரமாக முறியடித்ததோடு, கெஷ்ம் தீவிலும் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஈரான் தனது பிராந்திய அண்டை நாடுகளை நோக்கிப் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இருப்பினும், அவை எதுவுமே இலக்குகளைத் தாக்கவில்லை.

குவைத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஈரானிய ஏவுகணைகள் இலக்கை எட்டாமல் வழியிலேயே விழுந்து நொறுங்கின.

பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படைகளால் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டன.

இதற்கு சற்று முன்னதாக, சர்வதேசக் கடல் பகுதியில் சட்டப்பூர்வமாகப் பயணித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பல்களை நோக்கி ஈரான் ஏவிய மூன்று தற்கொலைத் தாக்குதல் டிரோன்களை அமெரிக்க மத்திய கட்டளையக (CENTCOM) படைகள் சுட்டு வீழ்த்தின.

ஈரான் போர்
ஈரான் போர்

மேலும், அமெரிக்கப் படைகள் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய ராணுவத்தின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் மீது தற்காப்புத் தாக்குதல்களையும் நடத்தின.

இந்தச் சம்பவங்களில் அமெரிக்க வீரர்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அமலில் இருக்கும் போர் நிறுத்தத்தின் போது, ஈரானின் அநியாயமான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக படைகளைப் பாதுகாக்கவும், எதிர்த்துப் போராடவும் சென்ட்காம் படைகள் தொடர்ந்து விழிப்புடனும் தயார் நிலையிலும் உள்ளன."

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க