செய்திகள் :

கொழுக்குமலையில் 400 அடி பள்ளத்தாக்கில் குதித்து இளைஞர் தற்கொலை; காதல் தோல்வி காரணமா?

post image

வேலூர் மாவட்டம் காட்பாடி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன், அவருடைய மகன் பரத் (வயது 21). இவர் சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகக் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

விடுமுறைக்கு அவர் தனது நண்பர்கள் 11 பேருடன் தேனி மாவட்டம், குரங்கணி மலை உச்சியில் உள்ள கொழுக்குமலைக்குச் சுற்றுலா வந்தார். கேரளா மாநிலம் சூரிய நெல்லிக்கு அருகில் உள்ளது இந்தக் கொழுக்கு மலை.

மேகங்களுக்கிடையில் சூரியன் உதிப்பதை நேருக்கு நேராகப் பார்க்க முடியும் என்பதால் பல மாநிலங்களிலிருந்து இளைஞர்களும் இங்கு வருகை புரிகின்றனர். நேற்று முந்தினம் இரவு சூரியநெல்லிக்கு வந்த பரத்தும் அவருடைய நண்பர்களும் இரவு தங்கி விட்டு காலையில் ஜீப்பில் கொழுக்குமலைக்குச் சென்றனர்.

நேற்று அதிகாலையில் அவர் தனது நண்பர்களுடன் சூரியநல்லியில் இருந்து ஜீப்பில் கொழுக்குமலைக்குச் சென்றார். காலை 6 மணியளவில் கொழுக்குமலையில் சிங்கப்பாறை என்ற இடத்தில் ஜீப்பை நிறுத்தி சூரிய உதயத்தை ரசித்துக் கொண்டு இருந்தனர்.

பரத் தனது நண்பர்களுடன் சூரிய உதயத்தைப் பார்த்து கொண்டிருந்தார். அவருடைய நண்பர்கள் பக்கத்தில் உள்ள  பள்ளமான பகுதியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். திடீரென பரத் அங்குள்ள சுமார் 400 அடி பள்ளத்தை நோக்கி குதித்தார். அதைச் சற்றும் எதிர்பாராத அவருடைய நண்பர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இளைஞர் குதிக்கும் காட்சி
இளைஞர் குதிக்கும் காட்சி

உடனடியாக இதுகுறித்து கேரள மாநில போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே கேரள வனத்துறையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்த பரத் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்துக்கு பிறகு அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

பரத் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இரண்டு நாள்களுக்கு கொழுக்குமலைக்குச் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவர் பரத் தற்கொலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

தி.மலை: பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் அட்டூழியம்; பணம் பறிப்பு - 8 பேர் கும்பல் சிக்கிய பின்னணி

வைகாசி மாத பௌர்ணமி கடந்த 30-ம் தேதி தொடங்கி, மறுநாள் மதியம் நிறைவடைந்தது. 30-ம் தேதி இரவு, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண், தன் நண்பர்களுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, இருசக்... மேலும் பார்க்க

'தோழியை சந்திக்க வந்த இடத்தில்.!' கோயம்பேடு தனியார் பார் தகராறு; மற்றொரு பெண்ணும் உயிரிழப்பு

கடந்த மே 31-ம் தேதி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில், நடனமாடும் போது இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் மற்றும் அவரது தோழிகளுக்கும், சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பிரச்னை ஏற்ப... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தியிருந்த காரை இரும்பு வியாபாரிக்கு விற்ற இளைஞர்; அதிர்ச்சியடைந்த உரிமையாளர்!

கேரள மாநிலம் ​மலப்புரம் மாவட்டம் வட்டம்குளம் பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவருக்குச் சொந்தமான கார் பழுதடைந்த காரணத்தால், பல ஆண்டுகளாக அவரது வீட்டின் முன்புறம் சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். ஆ... மேலும் பார்க்க

குமாரபாளையம்: 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் 12 வயது சிறுமியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குமாரபாளையம் காவல் ... மேலும் பார்க்க

45 லிட்டர் கொள்ளளவு டேங்கில் 52 லிட்டர் பெட்ரோல் எப்படி? - கார் உரிமையாளரால் அம்பலமான மோசடி

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது புத்தம் புதிய காரின் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கில் 52 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாகக் கூறி ரசீது வழங்கப்பட்டதைக் கண்டு கார் உரிமையாளர் ஒருவர் அ... மேலும் பார்க்க

கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட்ட வழக்கு; 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டன

கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர், ஜெகநாதன் (வயது: 52). சமூக ஆர்வலரான அவர், அப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்தார். க.பரமத்தி, தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் இய... மேலும் பார்க்க