செய்திகள் :

``கூட்டணி குறித்து கருத்து சொல்ல செல்வப்பெருந்தகை யார்..?" - எம்.பி பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி!

post image

காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ``ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பு என்ன இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் அதிருப்தி மனநிலையை பிரதிபலிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், எம்.பி பிரவீன் சக்ரவர்த்தி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``புதிய தலைமைச் செயலகம் அமைப்பது என்பது ஒட்டுமொத்த தமிழ்நாடு மாநிலத்திற்கான ஒரு திட்டமாகும். அதைச் சென்னையில் எங்கு அமைத்தாலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்குச் சில பாதிப்புகள் வருவது இயல்பானதுதான். எனவே, அதன் பாதிப்புகளையும் பலன்களையும் கணக்கிட்டு முடிவெடுக்க வேண்டும்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

இந்த எதிர்ப்பு இயல்பானதாகவோ அல்லது எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்பட்டதாகவோ இருக்கலாம். எதுவாகினும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் தலைவர்களுடனும் விவாதித்த பிறகு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இது குறித்து அதிகாரபூர்வக் கருத்தைத் தெரிவிப்பார். கூட்டணிக் குறித்து கருத்து தெரிவிக்க (செல்வப் பெருந்தகை) யார் அவருங்க இப்போ? எதுக்கு தேவையில்லாம வேஸ்ட்டா... முன்பு அவர் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இப்போது அதெல்லாம் தேவையா? கூட்டணிக்குள்ளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எந்தவிதக் குழப்பமும் இல்லை.

கூட்டணித் தலைவர்கள் மற்றும் முதலமைச்சருடன் நடந்த ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணி எவ்வளவு பலமாக இருந்ததோ, அதே பலத்துடன் தற்போதும் தொடர்கிறது. டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, தமிழ்நாட்டின் அரசியல் சூழல், காங்கிரஸ் அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் அகில இந்தியப் பொறுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் 'தமிழக வெற்றிக் கழகம்' போட்டியிடுகிறது. அதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. அதேபோலப் புதுச்சேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

பிரவீன் சக்ரவர்த்தி
பிரவீன் சக்ரவர்த்தி

அவருக்குத் தமிழக வெற்றிக் கழகமும் மற்ற தோழமை கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர்கள் தலைமையில் இரு குழுக்களை அறிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை (Delimitation) எதிர்ப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மாநில உரிமைகள் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தோழமை கட்சிகளும் ஏகமனதாக ஆதரித்துள்ளன. இதில் எவ்விதக் குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாகக் கூட்டணியில் அதிகாரப் பங்கீட்டுடன் அமைந்த இந்த ஆட்சியைத் தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்" என்றார்.

``காசு வாங்கிக்கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார்" - விஜய் சேதுபதியைச் சாடும் கனிமொழி சந்தோஷ்

பிக்பாஸ் 10-வது சீசனின் தொகுப்பாளராக இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த வார நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த நிகழ்வுகளை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். ஆனால், அது ஆ... மேலும் பார்க்க

புதிய தலைமை செயலகம்: `ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தை..!'- கொதிக்கும் மீனவர்கள்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

தவெக கூட்டணி: "ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கவில்லை எனில்..." - செல்வப்பெருந்தகை

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள், சென்னையில் அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... மேலும் பார்க்க

'அமைச்சரவையின் முதல் விக்கெட்... பதைபதைப்பில் 'கில்லி' சரத்? - அதிரடிக்கு தயாராகும் முதல்வர்?

கிரிக்கெட் மைதானத்தில் மாத்திரை நுணுக்கியது தொடங்கி தாம்பரம் மாநகராட்சி டெண்டர் ஊழல் வரைக்கும் தொடர் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் கில்லி சரத். 'அமைச்சர் போதைப் பொருள் பயன்படுத்தினார... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: பள்ளியில் கழிவறை இருந்தும் காவிரி படுகையை நாடும் மாணவர்கள்; அவலநிலைக்கு காரணம் இதுதான்!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நூறு ஆண்டுகளைக் கடந்த இந்தப் பள்ளியில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளில்... மேலும் பார்க்க

இறுதி ஒப்புதலுக்கு Waiting; கிடைத்துவிட்டால் இந்தியாமீது அமெரிக்காவின் 100% வரி பாயும்! விவரம் என்ன?

அடுத்த பிப்ரவரி மாதம் வந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘நான் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிப்பதற்கான பணிகளைச் செய்வேன்’ என்று ... மேலும் பார்க்க