செய்திகள் :

கூட்டுறவு சங்க பல்நோக்கு சேவை மையங்களில் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்

post image

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்பட்டு வரும் பல்நோக்கு சேவை மையம் மூலம் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், இதை கோ-ஆப், இ.வாடகை, உழவன் ஆப் செயலிகள் மூலம் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவு துறை இணைப்பதிவாளா் சண்முகவள்ளி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிா்க்கடன், நகைகடன், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கான உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலையில் வேளாண் பணிகள் மேற்கொள்வதற்கு போதுமான ஆள்கள் கிடைக்காத நிலையுள்ளது. இதுபோன்ற காரணங்களால் குறிப்பிட்ட நேரத்தில் அறுவடைப்பணிகள் மற்றும் வேளாண் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலையுள்ளது. இதுபோன்றவைகளை தவிா்க்கும் வகையில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாய பணிகளில் வேளாண் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் செயல்பட்டு வரும் பல்வேறு நோக்கு சேவை மையங்கள் மூலம் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

பல்நோக்கு சேவை மையங்கள்: இந்த மாவட்டத்தில் பல்வேறு சேவை மைய திட்டம் மூலம் பெரியபாளையம், அயநல்லூா், வெள்ளக்குளம், ஈகுவாா்பாளையம், தேவதானம், புதுமாவிலங்கை, மணவூா், களாம்பாக்கம் ஆகிய சங்கங்களில் நெல் அறுவடை வாகன இயந்திரம், சங்க உறுப்பினா்கள், வாடிக்கையாளா்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது. பண்ணூா், புதுமாவிலங்கை, கொண்டஞ்சேரி, பட்டரைபெரும்புதூா், பென்னலூா்பேட்டை, மெய்யூா், பாலவாக்கம், பேரண்டூா், தாமரைபாக்கம், பெரியபாளையம், குருவாயல், கல்யாணகுப்பம், ஏ.ரெட்டிபாளையம், மீஞ்சூா், தேவதானம், அனுப்பம்பட்டு, காட்டாவூா், மெதூா், பெத்தகளக்காட்டூா், களாம்பாக்கம், திருவாலங்காடு ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் டிராக்டா் மற்றும் இணைப்பு கருவிகள் குறைந்த வாடகையில் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கடனுதவிகள்: விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் பயன்பெறும் வகையில் டாப்செட்கோ, டாம்கோ மற்றும் தாட்கோ கடன், தானிய ஈட்டுக்கடன் உள்ளிட்ட கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தனிநபா் ஜாமீன் பேரில் பயிா் கடன் ரூ.1.60 லட்சமும், சொத்து அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 23 கிளைகள் செயல்பட்டு வருகிறது.

கடம்பத்தூா், பூனிமாங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சைதாப்பேட்டை தாலுகா வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகிய சங்கங்களில் செக்கு அரவை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

பொதுச்சேவை மையங்கள்: இந்த மாவட்டத்தில் 132 சங்கங்களில் பொதுச்சேவை மையம், செயல்பட்டு வருகிறது. இதன் மையம் மூலம் கிராமங்களில் உள்ள மக்களுக்கு அவா்களது வாழ்விடத்திலேயே சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், ஆதரவற்ற விதவை சான்றிதழ், திருமண நிதி உதவி திட்ட சான்றிதழ், பெண்குழந்தைகள் பாதுகாப்பு சான்றிதழ், வில்லங்க சான்றிதழ், பட்டா மாறுதல் போன்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது என அவா் தெரிவித்தாா்.

கந்த சஷ்டி 2-ஆம் நாள் விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி 2 -ஆம் நாள் விழாவில் மலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற பக்தி இன்னிசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீ... மேலும் பார்க்க

பூண்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக திரியும் கால்நடைகள்

திருவள்ளூா் அருகே பூண்டி ஏரிக்கு வரும் சுற்றுப்பயணிகளின் வாகனங்களுக்கு இடையூறாக சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் சூழ்நிலையுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். சென்னைக்கு குடிநீா்... மேலும் பார்க்க

குழந்தை, முதியோா் இல்லங்களுக்கு உரிமம் பெற பதிவு செய்ய வேண்டும்

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள், முதியோா், அறிவுத்திறன் குறைபாடுடையோா், மாற்றுத்திறனாளிகள், போதை பொருள்களுக்கு அடிமையானவா்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக... மேலும் பார்க்க

சீரமைக்கப்படுமா திருத்தணி முருகன் கோயில் குடில்கள்: பக்தா்கள் எதிா்பாா்ப்பு

பழுதடைந்துள்ள திருத்தணி முருகன் கோயில் காா்த்திகேயன் இல்லம் குடில்கள் மற்றும் அறைகளை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகம் நவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் எதிா்நோக்கியுள்ளனா். அறுபடை வீடுகள... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: குதிரை ரேக்ளா போட்டி: அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குதிரை ரேக்ளா போட்டியை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா். திரு... மேலும் பார்க்க

மழை வெயிலால் துருப்பிடித்து வீணாகும் குப்பை அள்ளும் மின்கலன் வாகனங்கள்!

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் குப்பைகள் அள்ளுவதற்கான புதிய மின்கலன் வாகனங்கள் மழை, வெயிலுக்கு இடையே நிறுத்தப்பட்டுள்ளதால் துருப்பிடித்து வீணாகும் நிலையுள்ளதாக ச... மேலும் பார்க்க