செய்திகள் :

கூட்டு பாலியல் வன்கொடுமை ; கொலை - உடலை திறந்தவெளியில் வீசிய கும்பல்; கடித்து குதறிய நாய்கள்

post image

டெல்லியின் வடமேற்குயில் உள்ள குஷாக் சாலையில் உள்ள ஸ்வரூப் நகர் பகுதியில் ஜெய்பால் ராணாவின் வயல் பகுதிக்கு அருகே மைனர் பெண் ஒருவரின் சிதைந்த உடல் கடந்த 13ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. உடலின் சில பகுதிகளையும் தெருநாய்கள் தின்று இருந்தது. அவரது ஒரு கை உடலில் இருந்து நாய்களால் கடித்து அகற்றப்பட்டு இருந்தது. அந்த உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதனை மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இது குறித்த விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர்.

அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாததாலும், குற்றவாளிகளின் அடையாளம் தெரியாததாலும், போலீஸ் குழுக்கள் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் ஒரு டெம்போ சம்பவ இடத்திற்கு அருகில் நகர்வது கவனிக்கப்பட்டது. இருள் காரணமாக அதன் பதிவு எண் தெளிவாகத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து மேலும் பல சிசிடிவி கேமராக்கள் மூலம் அதன் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்தனர்.

இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சந்தேகத்திற்குரிய டெம்போ கண்டுபிடிக்கப்பட்டு அதன் ஓட்டுநரை அடையாளம் கண்டு விசாரித்தனர். அவரிடம் விசாரித்து 4 பேரை கைது செய்தனர். அதில் சுபம் என்பவரை தவிர மற்ற மூன்று பேரும் மைனர்கள் ஆவர். இது குறித்து போலீஸார் கூறுகையில்,'' சிறுமியும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். குற்றம் நடந்தபோது அப்பெண் அவர்களுடன் டெம்போவில் பயணித்துள்ளார். நான்கு பேரும் மது அருந்திவிட்டு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர்''என்று தெரிவித்துள்ளனர்.

சிறுமியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் புகார் தெரிவிக்கவில்லை. அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சில நாட்களுக்குப் பிறகு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு : மாமியாரைக் கொலை செய்த மருமகள் - சிக்கியது எப்படி?

செங்கல்பட்டில் பெரியநத்தம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பெருந்தேவி (61). இவரின் மகன் வெங்கடேசன் (34). அவரின் மனைவி இந்துஜா (28). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். செப்டம்பர் 13-ம் தேதி மாலை ... மேலும் பார்க்க

பிச்சை போட மறுத்த பெண்; மூக்கைக் கடித்து மூக்குத்தியைப் பறித்த யாசகர்; உத்தரப்பிரதேசத்தில் துணிகரம்

மும்பை புறநகரில் உள்ள நவிமும்பை கோபர் கைர்னே என்ற இடத்தைச் சேர்ந்த மோனிகா ரெய்னா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவர்தனில் கடந்த ஆறு மாதங்களாகத் தங்கி இருந்து மத சடங்குகளில் பங்கேற்று ... மேலும் பார்க்க

சௌதி அரேபியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள்; அரசின் நடவடிக்கை- திருச்சி வந்தடைந்த உடல்கள்!

சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் மற்றும் கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் ஆகிய இரண்டு மீனவர்கள், கடந்த... மேலும் பார்க்க

சிவகங்கை: கண்மாய்க்குள் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட இருவர்; 5 பேர் அதிரடி கைது!

சிவகங்கை அருகே செப்டம்பர் 16 அன்று 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய 5 நபர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.கொலை பின்னணிசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கு... மேலும் பார்க்க

பரிகார ரூமில் பள்ளி சீருடை, லேப்டாப் முழுக்க ஆபாச வீடியோக்கள்; சேலம் சாமியாரின் அதிர்ச்சிப் பின்னணி

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த 50 வயதான விஜயராஜா ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்திருக்கிறான்.‌‌ மேலும், சனீஸ்வரா பரிகார நிலையம் என்கிற பெயரில் போலியாக மாந்திரீக மைய... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு; கடித்துக் குதறி எஜமானர் குடும்பத்தைக் காப்பாற்றிய வளர்ப்புப் பூனை

வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை, காதல் பறவைகள், புறாக்கள், அணில்கள், அலங்கார வண்ணமீன்கள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்கள். இவற்றில் குறிப்பாக நாய்கள் வீட்டுக் காவலுக்கும், பூனைகள் எலிகளைக் க... மேலும் பார்க்க