செய்திகள் :

கேரளம்: வாழைத்தார்களில் MDMA போதைப்பொருள் கடத்தல்; மாநில விருது பெற்ற முன்மாதிரி விவசாயி கைது

post image

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு அருகே உள்ள பாயிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் 'டேனி' என்றழைக்கப்படும் தனேஷ் எஸ். நாயர் (31). தனேஷ், 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஜெர்மனியில் தங்கி வேளாண் வணிகம் பயின்றவர்.

2018-ல் கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பின் ஊருக்கு திரும்பிய அவர், கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு பகுதியில் பெரிய அளவில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து வாழைத்தோட்டங்கள் அமைத்து விவசாயம் செய்துவந்தார். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தியதற்காக இவருக்கு 2023-ம் ஆண்டு கேரள மாநில அரசின் 'சிறந்த இளம் விவசாயிக்கான விருது' வழங்கப்பட்டது.

அதே சமயம் தனேஷ் விவசாயி என்ற அடையாளத்தை முகமூடியாகப் பயன்படுத்தி தனது தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களுக்குள் ரசாயனப் போதைப்பொருட்களைப் பொட்டலங்களாக மறைத்து வைத்து லாரிகள் மூலம் கேரளாவுக்குக் கடத்தி வருவதாக கேரள போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் ஆலுவா டி.எஸ்.பி பைஜு பவுலோஸ் தலைமையிலான தனிப்படை போலீஸார் அங்கமாலியில் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அதில் லாரியில் வந்த வாழைத்தாரில் போதைப்பொருட்கள் கடத்திய தனேஷ் பிடிபட்டார். அவரிடமிருந்து 803 கிராம் ஹாஷிஷ் ஆயில் மற்றும் 8 கிராம் எம்.டி.எம்.ஏ ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டன.

எம்.டி.எம்.ஏ
எம்.டி.எம்.ஏ

இதற்கு முன் ஆலுவாவில் 185 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளுடன் ஹரிகிருஷ்ணன் என்பவரும், தோப்பும்படியில் 7 கிராம் போதைப்பொருளுடன் ஷினு செபஸ்டியன் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஹரிகிருஷ்ணனின் செல்போன் உரையாடல்கள் மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகளை ஆய்வு செய்தபோதே, விவசாயி தனேஷ் போதைப்பொருள் கடத்தும் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தனேஷைக் கைது செய்தனர்.

போதைபொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட விவசாயி தனேஷ்
போதைபொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட விவசாயி தனேஷ்

தனேஷின் செல்போனைப் பரிசோதித்ததில், வாழைத்தார்களுக்குள் போதைப்பொருளைப் பதுக்கி வைக்கும் செயல்முறைகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக நடந்த நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்ஸ்டாகிராம் மூலமாக உள்ளூர் விநியோகஸ்தர்களுக்குத் தகவல் தெரிவித்து, மாநிலம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம்: பாமக பிரமுகர் கொலை; போலீஸாரையும் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரௌடி சுட்டுப்பிடிப்பு!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது 43). பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகரான ஞானவேல் ஃபைனான்ஸ் தொழிலும் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதே பகுதியில் வச... மேலும் பார்க்க

நாகை: யூனியன் ஆபீஸ் வங்கிக் கணக்கை ஹேக் செய்த மர்ம கும்பல் - பல கோடி சுருட்டியதால் அதிர்ச்சி

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அலுவலகம். இதன் வங்கிக் கணக்கைச் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்த டிஜிட்டல் மர்ம கும்பல் கணக்கில் இருந்த ரூ.11 லட்சத்தை டிஜிட்டல் முறையில... மேலும் பார்க்க

`யார் பெரிய ரௌடி?’ - போட்டியில் நடந்த கொலை; துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த கடலூர் பெண் இன்ஸ்பெக்டர்

``காலையில் வாங்கிய அடிக்கு இப்போது நியாயம் கேட்டு வந்திருக்கானுங்க...”கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி பிரித்விராஜன். சரித்திரப் பதிவேடுக் குற்றவாளியான இவர் மீது ... மேலும் பார்க்க

திருமணம் தாண்டிய உறவைக் கண்டித்த கணவன்; கொன்றுவிட்டு மாரடைப்பு என நாடகமாடிய மனைவி; சிக்கியது எப்படி?

பெங்களூரு பெட்டதாசனபுரா மெயின் ரோட்டில் உள்ள தொட்டதொகுருவில் வசிக்கும் உபேந்திராவும், அனிதாவும் தனியார் வங்கிகளில் கடன் தொடர்பான சிறிய கால் சென்டர் ஒன்றை நடத்தி வந்தனர். ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்... மேலும் பார்க்க

குடிநீர்த் தொட்டிக்குள் கிடந்த சடலம்; அமெரிக்காவை உலுக்கிய எலிசா லாம் மரணம்! குருதிச் சுவடுகள் 2

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் என்றாலே மின்னும் ஹாலிவுட் கனவுகளும் வண்ணமயமான விளக்குகளும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதே நகரின் இன்னொரு பக்கத்தில், கான்கிரீட் கட்டடங்களுக்கு நடுவே உறைந... மேலும் பார்க்க

'நான் கடவுள், எனக்கு கீழ்படியவேண்டும்' - சாமியார் மீது ஆசிரமத்தில் இருந்த பெண் பாலியல் புகார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பெண் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருக்கும் விருந்தாவனில் உள்ள சேவாதாம் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அப்போது அப்பெண் அங்கிருந்த மதபோதகர் இந்திரதேவ் மகாராஜ்... மேலும் பார்க்க