செய்திகள் :

கேரள மாநில பெயர் 'கேரளம்' என மாற்றும் மசோதா மக்களவையில் நிறைவேறியது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

post image

கேரள மாநிலத்தின் பெயரை `கேரளம்' என மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடங்கி பல்வேறு நடவடிகைகள் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று மக்களவையிலும் கேரளம் பெயர் மாற்றம் சம்பந்தமான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு பெயர் மாற்றம் முழுமையாக அமலுக்கு வரும். பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் 'கவர்ன்மென்ட் ஆஃப் கேரளம்' (Government of Keralam) என்றும், மலையாளத்தில் 'கேரளம் சர்க்கார்' என்றும் மாற்றப்பட வேண்டும். கேரள சட்டப்பேரவை இனி 'கேரளம் சட்டப்பேரவை' என்று அழைக்கப்படும். தலைமைச் செயலகம் முதல் கிராம அலுவலகங்கள் வரையிலான அனைத்து அரசு அலுவலகங்களின் பெயர்ப்பலகைகள், முத்திரைகள், லெட்டர் பேடுகள், இணையதளங்கள், மொபைல் செயலிகள், மற்றும் லோகோக்கள் என அனைத்தும் மாற்றப்பட வேண்டியிருக்கும்.

கேரள உயர்நீதிமன்றம்

சான்றிதழ்கள், அரசிதழ்கள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் புதிய பெயரில் அச்சிடப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களின் பெயர்களும் மாறும். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பெயருடன் கேரளம் என சேர்க்கப்படும். பல்வேறு ஆணையங்கள் மற்றும் நலநிதிகளின் பெயர்களும் மாற்றப்படும். பெயர் மாற்றத்துக்காக பெருமளவில் நிதிச் சுமை ஏற்படும் என கருதப்படுகிறது. ​பல்கலைக்கழகங்களின் பெயர்களை மாற்றுவதற்குச் சட்டத் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்.

கேரளம்

நீதிமன்ற வழக்குகளில் மாநிலத்தின் பெயர் மாறும். இதுவரை பதிவான வழக்குகளில் 'கவர்ன்மென்ட் ஆஃப் கேரளா' என்று குறிப்பிடப்பட்டிருப்பது அப்படியே தொடரும். ஆனால், கேரளம் என்ற பெயர் மாற்றம் அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் புதிய வழக்குகளில் 'கவர்ன்மென்ட் ஆஃப் கேரளம்' என்றே குறிப்பிடப்படும். ​அதேவேளையில், 'கேரள உயர் நீதிமன்றத்தின்' பெயர் மாறுவதற்கு வாய்ப்பில்லை. பாம்பே, மதராஸ், கல்கத்தா, கவுகாத்தி உயர் நீதிமன்றங்கள் இன்னமும் பழைய பெயர்களிலேயே இயங்கி வருகின்றன. உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்ற வேண்டுமெனில், நாடாளுமன்றத்தில் தனியாகச் சட்டமியற்றப்பட வேண்டும். அலகாபாத் நகரத்தின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்றப்பட்ட போதிலும், அங்குள்ள உயர் நீதிமன்றம் இன்னமும் பழைய பெயரிலேயே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அமளி ஒருபக்கம், ஆனாலும் நிறைவேறும் மசோதாக்கள் - நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேறும் மசோதாக்கள்!

ஜூலை 20-ம் தேதி தொடங்கி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளையோடு (ஆகஸ்ட் 13) முடிவடைகிறது. 25 நாள்கள் கொண்ட இந்தக் கூட்டத்தொடரில் விடுமுறைகள் போக, 19 நாள்கள் அவை கூடியது... கூடுகிறது. நீட் வ... மேலும் பார்க்க

கோவை அருகே கொசு மருந்து அடித்ததால் இருவர் உயிரிழந்ததாக புகார் – நடந்தது என்ன?

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி ஏழாவது வார்டுக்கு உட்பட்ட உப்புத்தோட்டம் பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று காலை அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க... மேலும் பார்க்க

‘மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளலாமா? அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ – வானதி காட்டம்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “தமிழ் படித்தவர்களுக்கு 'அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி' தெரியாது என்ற அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற... மேலும் பார்க்க

``ரஷ்யாவில் விரைவில் தேர்தல்; புதின் போடும் போர் பிளான் இது" - என்ன சொல்கிறார் ஜெலன்ஸ்கி?

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. அடுத்த மாதத்தில் ரஷ்யாவில் தேர்தல் வேறு வர இருக்கிறது. இந்தப் போரை வைத்து உள்நாட்டில் ரஷ்ய அதிபர் ட்ரம்ப் 'கேம்' ஆடுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் சாடி... மேலும் பார்க்க

TN Assembly: தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானத்தை கொண்டுவரும் முதல்வர் விஜய்! திமுக-வின் முடிவு என்ன? | Live Updates

தனித் தீர்மானமும், திமுகவின் நிலைப்பாடும்!தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் ... மேலும் பார்க்க